பொருளாதார வரலாறு
பொருளாதார வரலாறு என்பது, கடந்த காலத்தின் பொருளாதாரங்களையும், பொருளியல் தோற்றப்பாடுகளையும் ஆய்வு செய்யும் துறை ஆகும். வரலாற்று வழிமுறைகள், புள்ளியியல் வழிமுறைகள், பொருளியல் கோட்பாடுகள் ஆகியவற்றை வரலாற்று நிலைமைகளுக்கும், நிறுவனங்களுக்கும் பயன்படுத்துவதன் மூலம் பொருளாதார வரலாற்றுப் பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்குள் நிதியியல் வரலாறு, வணிகவியல் வரலாறு என்னும் விடயங்கள் அடங்குகின்றன. மக்கள்தொகையியல், உழைப்பு வரலாறு போன்ற சமூக வரலாற்றின் பகுதிகளுடன் பொருளாதார வரலாறு மேற்பொருந்துகிறது.