பொருள் இலக்கணப் பகுப்புகள்
வாழ்க்கை ஒரு பொருள். சொல் வகையில் இதனைத் தொழிற்பெயர் என்பர். தமிழ் மொழியை எழுதப்பட்ட எழுத்திலக்கணமும், பேசப்பட்ட சொல்லிலக்கணமும் கண்டனர், தொல்காப்பியர் போன்ற மொழியியலாளர்கள். வாழ்க்கைக்கு, வாழ்க்கை பற்றிய பாடல்களுக்கு இலக்கணம் கண்டது தமிழ்மொழி ஒன்றே.
இதன் பகுப்புகள் தொல்காப்பியத்தில் இவ்வாறு அமைந்துள்ளன.
- பொருள் (2) அகப்பொருள், புறப்பொருள்
- அகப்பொருள் (2) களவு, கற்பு (கைகோள் என்னும் ஒழுக்கம்)
- அகப்பொருள் (7) கைக்கிளை, அன்பின் ஐந்திணை, பெருந்திணை
- அன்பின் ஐந்திணை (5) குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
- அன்பின் ஐந்திணை (3) முதல், கரு, உரி (பொருள்)
- முதல்பொருள் (2) நிலம், பொழுது
- நிலம் (4) நானிலம் (பாலைக்கு நிலம் இல்லை)
- பொழுது (2) பெரும்பொழுது, சிறுபொழுது (ஒவ்வொன்றிலும் 6 பிரிவுகள்)
- கருப்பொருள் (8+) தெய்வம், உணா, மா, மரம், புள், செய்தொழில், பறை, யாழின் பகுதி முதலானவை
- உரிப்பொருள் (5) புணர்தல், இருத்தல், ஊடல், இரங்கல், பிரிவு
- புறப்பொருள் (7) வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்