பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் (Material safety data sheet, MSDS) என்பது ஒரு பொருளின இயல்புகளை பற்றி அறிய உதவும் படிவமாகும்.
இத்தாள் வேலைத்தள பாதுகாப்புக்கு மிக முக்கியமான ஆவணமாகும்.இது தொழிலாளிகள், பொறியாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு பொருளோடு அல்லது அப்பொருளில் வேலை செய்யும்போது எவ்வாறு பாதுகாப்பாக வேலை செய்வது என்பதை விளக்கும் ஒரு படிவமாகும்.[1][2][3]
இத்தாள் அப்பொருளின் உருகுநிலை (melting point), கொதிநிலை (Boiling point), சுடர்நிலை (Flash point), நச்சுத்தன்மை (toxicity), உடல்நலத்தின் மீதான தாக்கம் (Health effects), முதலுதவி (Fitst aid), எதிர்தாக்கதன்மை (Reactivity), சேமிப்பு (Storage), கழிப்பு (Disposal), பாதுகாப்பு சாதனங்கள் (Protective equipments), சிதறல் கையாளுதல் (Spill handling) போன்றவற்றை உள்ளடக்கிய படிவம்.
சில அதிகார எல்லைகள், இப்படிவம் சுற்றுபுறச்சூழல் மீதான தாக்கங்களை (Effects on Environment) விளக்கவேண்டும் என்றும் வற்புறுத்துகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Transport - Transport - UNECE". Unece.org. Retrieved 22 December 2017.
- ↑ "Hazard Communication Standard: Safety Data Sheets". U.S. Occupational Safety and Health Administration. Retrieved 20 October 2017.
- ↑ "Guidance - ECHA". Guidance.echa.europa.eu. Retrieved 22 December 2017.