பொறிமுறைச் சமநிலை

தரையில் ஓய்வில் உள்ள பொருள் ஒன்றின் மீது தாக்கும் விசைகளைக் காட்டும் வரைபடம்.

ஓர் அமைப்பின் உள்ளே அல்லது அந்த அமைப்பிற்கும் அதன் சூழலுக்கும் இடையே சமனற்ற விசைகள் ஏதும் இல்லாதிருந்தால் அவ்வமைப்பு பொறிமுறைச் சமநிலையில் (mechanical equilibrium) இருக்கிறது எனலாம். அதே போல அவ்வமைப்பின் உள்ளே எல்லா இடங்களிலும் அழுத்தம் சமமாக இருக்கும்போதும், அவ்வமைப்பிற்கும் சூழலுக்கும் இடையேவும் அழுத்தம் ஒன்றாக இருக்கும்போதும் அங்கு பொறிமுறைச் சமநிலை இருக்கும். இரண்டு அமைப்புகளின் இடையே அழுத்தம் ஒன்றாக இருந்தால் அவையிரண்டும் பொறிமுறைச் சமநிலையில் இருக்கின்றன என்று கூறலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொறிமுறைச்_சமநிலை&oldid=1666590" இருந்து மீள்விக்கப்பட்டது