பொறையாறு சங்ககால ஊர்களில் ஒன்று. இக்காலத்தில் தரங்கம்பாடியை அடுத்து உள்ள பொறையாறு என்னும் ஊர்தான் அது. சங்ககாலத்தில் பெரியன் என்னும் பெயர் கொண்ட மன்னன் இங்கு இருந்துகொண்டு ஆண்டுவந்தான். இவன் சிறந்த கொடைவள்ளல்.

இவ்வூரில் குருகு இனக் கொக்குகள் மிகுதி. [1]

இந்த ஊர் நெல்வளம் மிக்கது. [2]

ஒருகாலத்தில் வேங்கட மலைக்கு வடக்கிலிருந்த நல்ல நெல் விளையும் நிலத்தைக் கொண்ட கல்லாடம் என்னும் ஊரில் வாழ்ந்த கல்லாடனார் என்னும் புலவரின் குடும்பம் பசியால் வாடியபோது இந்த ஊர் பொறையாற்றுக்கு வந்து அரசன் பெரியன் கொடையால் தம் பசியைப் போக்கிக்கொண்டது. [3]

அடிக்குறிப்பு தொகு

  1. தாழைச் சுறவு மருப்பு அன்ன முள் தோடு ஒசிய இறவு ஆர் இனக்குருகு இறை கொள இருக்கும் நறவு மகிழ் இருக்கை நற்றேர்ப் பெரியன் கட்கமழ் பொறையாறு அன்ன என் நற்றோள் - உலோச்சனார் பாடல் நற்றிணை 131
  2. ததைந்த புனலின் செழுநகர் வரைப்பு … வேலி ஆயிரம் விளைக நின் வயலே - கல்லாடனார் பாடல் புறநானூறு 391 சிதைந்த நிலையில்
  3. வேங்கட வைப்பின் வடபுலம் பசித்து என ஈங்கு வந்து இறுத்த என் இரும்பேர் ஒக்கல் தீர்கை விடுக்கும் பண்பு … முதுகுடி கல்லாடனார் பாடல் புறநானூறு 391 சிதைந்த நிலையில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொறையாறு&oldid=902394" இலிருந்து மீள்விக்கப்பட்டது