பொல்லம் மல்லையா யாதவ்

பொல்லம் மல்லையா யாதவ் (Bollam Mallaiah Yadav) என்பவர் தெலங்காணா மாநிலத்தினைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார்.[1] இவர் தற்பொழுது தெலங்காணா மாநில சமிதி கட்சியின் சார்பில் கோதாட சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[2][3]

பொல்லம் மல்லையா யாதவ்
బొల్లం మల్లయ్య యాదవ్‌
சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
 2018 - முதல்
தொகுதிகோதாட சட்டமன்ற தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1965, ஆகத்து 14
கரிவிரலா, நாடிகுடம் மண்டல், சூர்யாபேட்டை மாவட்டம், தெலங்காணா
அரசியல் கட்சிதெலுங்கானா இராட்டிர சமிதி
துணைவர்இந்திரா
பிள்ளைகள்இரண்டு மகன்கள், ஒரு மகள்
பெற்றோர்வீரய்யா, வீரம்மா

இளமை

தொகு

மல்லையா யாதவ், தெலங்காணா மாநிலம், சூர்யாபேட்டை மாவட்டம், நாடிகுடம் மண்டல், கரிவிராலா கிராமத்தில் வீரய்யா மற்றும் வேரம்மா ஆகியோருக்கு மகனாக ஆகத்து 14, 1965-ல் பிறந்தார். 1992-ல் உசுமானியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[4] மல்லையாவிற்கு இந்திராவுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

அரசியல் சிறப்புகள்

தொகு

இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய மல்லையா யாதவ், 2009ஆம் ஆண்டு கோதாடா சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு 13,544 வாக்குகள் பெற்று நான்காவது இடத்தைப் பிடித்தார். பின்னர் இவர் 2012-ல் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். இக்கட்சியில் தீவிரமாக பணியாற்றி மூத்த தலைவருகளுள் ஒருவராக ஆனார். சில காலம் தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளராக பணியாற்றினார். கோதாடா தொகுதியின் பொறுப்பாளராகவும் பணியாற்றினார். 2014 தெலுங்காணா பொதுத் தேர்தலில், இவர் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக கோதாட சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். இத்தேர்தலில் காங்கிரசு வேட்பாளர் நலமதா பத்மாவதியிடம் 13,437 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.[5] பின்னர் யாதவ் தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து பிரிந்த தெலுங்கானா இராட்டிர சமிதியில் இணைந்தார். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நலமட பத்மாவதியைவிட 378 ஓட்டுகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்றார்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Member's Profile - Telangana-Legislature". www.telanganalegislature.org.in. Archived from the original on 2021-05-27. பார்க்கப்பட்ட நாள் 2021-08-23.
  2. "Kodad Assembly Election: TRS' Bollam Mallaiah Yadav wins the elections". www.timesnownews.com. பார்க்கப்பட்ட நாள் 2021-08-23.
  3. admin (2019-01-09). "Kodad MLA Bollam Mallaiah Yadav". Telangana data (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-23.
  4. "Bollam Mallaiah Yadav | MLA | Karivirala | Nadigudem | Kodad | TRS". the Leaders Page (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-04-21. பார்க்கப்பட்ட நாள் 2021-08-23.
  5. "Bollam Mallaiah Yadav(TDP):Constituency- KODAD(NALGONDA) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-08-23.
  6. "Bollam Mallaiah Yadav(TRS):Constituency- KODAD(SURYAPET) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-08-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொல்லம்_மல்லையா_யாதவ்&oldid=3589737" இலிருந்து மீள்விக்கப்பட்டது