பொ. வே. பக்தவச்சலம்

பொ. வே. பக்தவச்சலம் (அக்டோபர் 13, 1936 - செப்டம்பர் 2, 2007[1]) ஒரு வழக்கறிஞராகவும் மார்க்சியவாதியாகவும் மனித உரிமைப் போராளியாகவும் வாழ்ந்தவர்.

பிறப்பும் கல்வியும்தொகு

வேலூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரியில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும் முதுகலைப் பட்டமும் பெற்றார். பின்னர், சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் பயின்றார். இவருடைய அண்ணன் மார்க்சியக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட காரணத்தால் பக்தவச்சலமும் பொதுவுடைமைக் கருத்துகளில் நாட்டம் கொண்டார். இந்திய பொதுவுடைமை மாணவர் அமைப்பில் சேர்ந்தார். அமெரிக்கச் சுதந்திரப் போர், பிரஞ்சுப் புரட்சி, உருசியப் புரட்சி, பகத் சிங்கின் வரலாறு போன்றவற்றைப் படித்து சமூக உணர்வு பெற்றார்.

செயற்பாடுகள்தொகு

 • தொழிலாளர்கள், பெண்கள், தாழ்த்தப்பட்டோர், ஊனமுற்றோர் ஆகியோரின் உரிமைகளுக்காகப் பக்தவச்சலம் நீதிமன்றங்களில் வழக்காடினார்.
 • தமிழ் நாட்டைச் சேர்ந்த 2000 கொத்தடிமைகளை ஆந்திர மாநிலத்திலிருந்து மீட்டெடுத்தார். அது மட்டுமல்லாது அவர்களுடைய வாழ்க்கைப் புனரமைப்புக்கான பணிகளைச் செய்தார்.
 • தருமபுரி வடார்க்காடு மாவட்டங்களில் 24 இளைஞர்களை 'மோதல் கொலைகள்' என்னும் பெயரில் கொல்லப் பட்டபோது தனியொரு வழக்கறிஞராக நீதி மன்றத்தில் போராடினார்.
 • மக்கள் உரிமைக் கழகம் என்னும் அமைப்பில் தலைவராக இருந்து மனித உரிமைப் பணியைச் செய்தார்.
 • காவல்துறையின் அத்துமீறல்களைக் கண்டித்தும் எதிர்த்தும் கிராமங்கள்தோறும் ஊர்கள்தோறும் மக்களிடையே பேசினார்.
 • தம் மூன்று பெண் குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்கும்போது 'மதம் சாதி இல்லை' என்று விண்ணப்பத்தில் குறித்தார்.
 • மார்க்சிய-லெனினிய நெறியில் தமிழ்த் தேசியம் என்னும் கொள்கையை வலியுறுத்தினார்.
 • 1991 ஆம் ஆண்டில் ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்குக் குரல் கொடுத்து ஆதரவு காட்டினார்.
 • தமிழ் பயிற்று மொழி, ஆட்சி மொழி, நீதி மன்ற மொழி எனப் பல துறைகளிலும் விளங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதற்காக நடந்த போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்கும் சென்றார்
 • தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தை அமுல்படுத்தக் கோரி தாமே மனுதாரராகப் பதிவு செய்து நீதி மன்றத்தில் வாதாடினார்.

மேற்கோள் நூல்தொகு

 • வரலாறு படைத்த தமிழறிஞர்கள் (ஆசிரியர்: புலவர் த. சுந்தரராசன், மணிவாசகர் பதிப்பகம், சென்னை)

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொ._வே._பக்தவச்சலம்&oldid=2129402" இருந்து மீள்விக்கப்பட்டது