போகிபீல் பாலம்

போகிபீல் பாலம், இந்திய மாநிலமான அசாமின் டிப்ருகட் மாவட்டத்தில் உள்ளது. இந்தப் பாலம் சாலைப் போக்குவரத்துக்கும், தொடர்வண்டிப் போக்குவரத்துக்கும் ஏதுவாக அமைகிறது. இது 2017 ஆம் ஆண்டிற்குள் கட்டிமுடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.[1] 4.94 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தப் பாலம் பிரம்மபுத்திரா ஆற்றின் மேல் உள்ள சாலை மற்றும் இரயில் பாலங்களிலேயே பெரியது ஆகும்.[2] 2018 திசம்பர் 25 ஆம் நாள் இந்தப் பாலத்தை பாரதப்பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.[3]

போகிபீல் பாலம்
বগীবিল দলং
பிற பெயர்கள் போகிபீல் பாலம்
போக்குவரத்து சாலையில் ஓடும் வண்டிகள், தொடர்வண்டிப் போக்குவரத்து
தாண்டுவது பிரம்மபுத்திரா ஆறு
இடம் திப்ருகார் மாவட்டம், அசாம்,  இந்தியா
வடிவமைப்பு தூலக்கட்டுப் பாலம்
கட்டுமானப் பொருள் எஃகு, பைஞ்சுதை
மொத்த நீளம் 4.94 கிலோமீட்டர் (3.07 மைல்கள்)
அதிகூடிய அகல்வு 125 மீட்டர் (410 அடி)
கட்டுமானம் தொடங்கிய தேதி 21 ஏப்ரல் 2002
கட்டுமானம் முடிந்த தேதி திசம்பர் 3, 2018
திறப்பு நாள் திசம்பர் 25, 2018
அமைவு 27°24′31″N 94°45′37″E / 27.40861°N 94.76028°E / 27.40861; 94.76028
அசாம் (இந்தியா) பாலத்தின் அமைவிடம்

1997 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் தேவகவுடாவால் இந்தப் பாலம் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 2002 ஆம் ஆண்டு அப்பாேதைய பாரதப் பிரதமர் வாஜ்பாய் பணிகளை தொடங்கி வைத்தார். இது திப்ருகரில் இருந்து 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. திப்ருகரில் இருந்து தேமாஜிக்கு சென்று திரும்ப இந்தப் பாலம் பெரிதும் உதவியாக இருக்கும்.[4] அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லையில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளதால், இரு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பயணிக்க ஏதுவாக இருக்கும்.[5][6]இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க முடியும். மேலும், சீனாவின் எல்லைக்கு அருகாமையில் இந்திய இராணுவ வீரர்கள் எளிதில் சென்றடைய முடியும்.

இப்பாலம் கட்டி முடிக்க ரூபாய் 5,690 கோடி செலவிடப்பட்டது. இந்தப் பாலம் அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் இடையேயான பயண நேரத்தை 10 மணி நேரம் அளவில் குறைப்பதற்கு உதவுகிறது. சீனாவின் எல்லையில் உள்ள அருணாச்சலப்பிரதேசத்தை நாட்டின் பிற பகுதிகளில் இருந்து எளிதில் அணுகுவதற்கு உதவுவதால் இந்தப்பாலம் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உள்ளது.[7]

சான்றுகள் தொகு

  1. "Bogibeel Rail-Cum-Road Bridge Project Targeted for Completion by March 2017". Press Information Bureau. Government of India. 25 July 2014. http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=107472. பார்த்த நாள்: 25 July 2014. 
  2. "Bogibeel Bridge project marks 10 years with slow work progress". Times of India. April 21, 2012 இம் மூலத்தில் இருந்து 2013-12-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131203062508/http://articles.timesofindia.indiatimes.com/2012-04-21/guwahati/31378487_1_mega-project-dibrugarh-senior-railway-official. பார்த்த நாள்: 26 May 2013. 
  3. "இந்தியாவின் மிகநீள ஈரடுக்கு பாலம்; பிரதமர் மோடி அர்ப்பணித்தார்". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2018.
  4. "Bogibeel Rail Bridge, India". பார்க்கப்பட்ட நாள் 26 May 2013.
  5. "A long wait for longest bridge in country". The Indian Express. May 6, 2012. http://www.indianexpress.com/news/a-long-wait-for-longest-bridge-in-country/945859/0. பார்த்த நாள்: 26 May 2013. 
  6. "Strategic Brahmaputra bridge to be ready by 2015?". Zee News. April 26, 2012. http://zeenews.india.com/news/north-east/strategic-brahmaputra-bridge-to-be-ready-by-2015_771755.html. பார்த்த நாள்: 26 May 2013. 
  7. "ராணுவ ரீதியில் முக்கியத்துவமான போகிபீல் பாலம்: சிறப்பம்சங்கள் என்னென்ன?". புதிய தலைமுறை. 26 திசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 26 திசம்பர் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போகிபீல்_பாலம்&oldid=3223082" இலிருந்து மீள்விக்கப்பட்டது