போகிமியம் (Bohemium) என்பது அணு எண் 93 என்ற எண்ணால் குறிப்பிடப்பட்ட ஒரு தனிமம் ஆகும். தற்போது நெப்டியூனியம் என்ற பெயரால் இது அழைக்கப்படுகிறது. இதன் கண்டுபிடிப்பு முதலில் தவறாகக் கூறப்பட்டது. செக் குடியரசிலுள்ள போகிமியாவில் கண்டறியப்பட்டதால் இத்தனிமத்திற்கு போகிமியம் எனப் பெயரிடப்பட்டது.[1][2]

என்ரிக்கோ பெர்மி 93 என்ற அணு எண்ணைக் கொண்ட ஆசோனியம் என்ற தனிமத்தைக் கண்டுபிடித்ததாக அறிவித்த சிறிது காலத்திற்குப் பின்னர் 1934 ஆம் ஆண்டு போகிமியம் என்ற பெயரிலான தனிமத்தின் கண்டுபிடிப்பு குறித்த கட்டுரை வெளியானது. 1938 ஆம் ஆண்டில் அணுக்கரு பிளவு செயல்முறை கண்டறியப்பட்ட பின்னர் மேற்கூறப்பட்ட இரண்டு கண்டுபிடிப்புகளும் தவறானவை என்று நிருபிக்கப்பட்டன. ஆனால் அதற்கு முன்பே அக்கண்டுபிடிப்புகள் எதிர்மறையான விளைவுகளுடன் மதிப்பாய்வு செய்யப்பட்டுவந்தன.[3][4][5]

போகிமியம் என்ற புதிய தனிமம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்நிகழ்வு இப்போது மதிப்பிழந்து விட்டது. செக் பொறியியலாளர் ஓடோலன் கோப்லிக் என்பவரால் அக்கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டது.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. Stern, A. (1934). "The new element bohemium the origin of proto-actinium". Journal of the Society of Chemical Industry 53: 581. doi:10.1002/jctb.5000533104. 
  2. Koblic, Odolen (1934). ".". Chemiker Zeitung 58: 683. 
  3. Noddack, Ida (1934). "Über das Element 93". Angewandte Chemie 47: 653. doi:10.1002/ange.19340473707. 
  4. Speter, M. (1934). "BOHEMIUM—AN OBITUARY". Science 80 (2086): 588–9. doi:10.1126/science.80.2086.588-a. பப்மெட்:17798409. Bibcode: 1934Sci....80..588S. 
  5. Ruth Lewin Sime (2000). "The Search for Transuranium Elements and the Discovery of Nuclear Fission". Physics in Perspective 2 (1): 48–62. doi:10.1007/s000160050036. Bibcode: 2000PhP.....2...48S. 
  6. "A New Radioactive Element beyond Uranium". Nature 134 (3376): 55. 1934. doi:10.1038/134055b0. Bibcode: 1934Natur.134R..55.. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=போகிமியம்&oldid=3145364" இலிருந்து மீள்விக்கப்பட்டது