போடிநாயக்கனூர் (பாளையம்)
தமிழகத்தில் விஜயநகரப் பேரரசின் ஆட்சி நடைபெற்ற போது, மதுரை மண்டலத்தை நிர்வகித்த விசுவநாத நாயக்கர், மதுரை மண்டலத்தை 72 பாளையங்களாகப் பிரித்தார். இப்பாளையங்களில் போடிநாயக்கனூர் எனும் பாளையமும் ஒன்று. இப்பகுதியின் பாளையக்காரராக இருந்த திருமலை போடிநாயக்கர் என்பவரின் பெயரால் இவ்வூர் அழைக்கப்படுகிறது. பாளையங்களின் ஆட்சியில் மிக பெரிய நில அமைப்புகளுடனும், இயற்கை வளம் நிறைந்ததாகவும், அதிக வரி தரும் பாளையமாகவும் இது அமைந்திருந்தது. [1]