போதனார்
போதனார் சங்ககாலப் புலவர். நற்றிணை 110 எண்ணுள்ள ஒரே ஒரு பாடல் மட்டும் இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் உள்ளது.
பெயர் விளக்கம்
தொகுஇவரத் பாடல் "பிரசம் கலந்த வெண்நுவைத் தீம்பால்" என்று தொடங்குகிறது. போதம் என்னும் சொல் பாலைக் குறிக்கும். இப் புலவரின் இயற்பெயர் தெரியாத நிலையில் பாலுண்ணச் செய்யும் செய்தியமைந்த பாடலைப் பாடியதால் எட்டுத்தொகை தொகுப்பு நற்றிணை நூலைத் தொகுத்தவர் 'போதனார்' என்று பெயர் சூட்டியுள்ளார்.
- போது = மலர்ந்துகொண்டிருக்கும் பூ.
- மலர் = முழுமையாக இதழ் விரிந்த பூ.
- போது < போதம் < பூக்கும் அறிவு.
- மலர் = மன உணர்வு (மலர்மிசை ஏகினான் - திருக்குறள் 3)
போதனார் - இயற்பெயர். (இதன் பொருள் விளக்கப்பட்டுள்ளது)
பாடல் சொல்லும் செய்தி
தொகுசிறுவிளையாடி
தொகுசெவிலி சிறுமிக்குப் பாலூட்டுகிறாள். ஒரு கையில் வெள்ளிக்கிண்ணத்தில் தேன் கலந்த பால். மற்றொரு கையில் சிறிய கோல். தோலின் நுனி பூப்போல் உள்ளது. கோலை அடிப்பது போல் சுழற்றிக்கொண்டு உண் என்று ஊட்ட வருகிறாள். சிறுமி உண்ண மறுத்துப் பந்தலைச் சுற்றி ஓடுகிறாள். செவிலி கால் ஓய்ந்துவிடுகிறது. சிறுமி ஓடுகிறாள். இது சிறுவிளையாட்டு.
அறிவும் ஒழுக்கமும்
தொகுசிறுவிளையாட்டி உலக அறிவையும், குடும்ப ஒழுக்கத்தையும் எங்குக் கற்றுக்கொண்டாள் என்று செவிலி வியக்கிறாள்.
ஒழுக்கம்
தொகு(அவள் இப்போது கொழுநன் வீட்டில் வாழ்கிறாள்.) கொழுநன் வீட்டில் வறுமை. தந்தை அனுப்பிவைத்த சோற்றை அவள் உண்ணவில்லை. கொழுநன் வீட்டு-உணவு இல்லாதபோது பட்டினி கிடக்கிறாள். கிடைத்தபோது மட்டும் உண்கிறாள். (தேன்பால் பருக மறுத்து ஓடியவள்) பட்டினி கிடக்கும் ஒழுக்கத்தை எங்கே கற்றுக்கொண்டாள்? - செவிலியின் வியப்பு.