போதி பார்பி அறுவடைத் திருவிழா

இந்தியப் பழங்குடிகள்

போதி பார்பி அறுவடைத் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் ஐந்தாம் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் இந்திய மாநிலமான அருணாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த ராமோ, பை - லிபோ, போகர் ஆகிய பழங்குடியினர் இயற்கையைப் போற்றிக் கொண்டாடுகின்றனர். இவ்விழாவில் விலங்குகளை பலியிடுவதும் உண்டு.[1]

பெயர்க்காரணம்

தொகு

போதி பார்பி என்றொரு பறவை இருந்ததாகவும், வெகு தொலைவில் இருந்து வரும் அந்தப் பறவை அறுவடைக் காலத்தின்போது கீச்சிட்டதாகவும் நம்புகின்றனர். இவர்களிடத்தில் நாட்களை கணக்கிடும் முறை இல்லாத காரணத்தினால், இந்தப் பறவை தென்படும் காலத்தில் விழாவைக் கொண்டாடுகின்றனர்.[1]

விழா நிகழ்வுகள்

தொகு
  • வழக்கமான சடங்குகளை முடித்ததும், ஆண்களும் பெண்களும் விருந்தினர்க்கு ஒயினும் இன்ன பிற உணவுகளையையும் வழ்னக்குகின்றனர்.[1]
  • பெரியோர்கள் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியும், இளையோர் நடனமாடியும் களிக்கின்றனர்.[1]

சான்றுகள்

தொகு