போனிக்கோகுரோயிட்டு

குரோமேட்டு கனிமம்

போனிக்கோகுரோயிட்டு (Phoenicochroite) என்பது Pb2OCrO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். மெலனோகுரோயிட்டு என்ற பெயராலும் அறியப்படும் இக்கனிமம் ஈய குரோமேட்டு கனிமமாகக் கருதப்படுகிறது. ஆரஞ்சு சிவப்பு நிறத்தில் படிகங்களாக உருவாகிறது. முதன்முதலில் 1839 ஆம் ஆண்டில் உருசிய நாட்டின் யூரல் மலைத்தொடரில் உள்ள பெரியோசோவ்சுகோய் சுரங்கத்தில் கண்டறியப்பட்டது.[1] அடர் சிவப்பு மற்றும் நிறம் என்ற பொருள் கொண்ட கிரேக்க சொற்களிலிருந்து இதன் நிறத்தைக் குறிக்கும் வகையில் பெயரிடப்பட்டது.[1]

போனிக்கோகுரோயிட்டு
Phoenicochroite
அடர் சிவப்பு போனிக்கோகுரோயிட்டு படிகங்கள், ஆரஞ்சு-மஞ்சள் சிகிவார்ட்செம்பர்கைட்டு உடன் புகைப்பட அகலம் 1.5 மி.மீ.
பொதுவானாவை
வகைசல்பேட்டு (குரோமேட்டு) கனிமம்
வேதி வாய்பாடுPb2O(CrO4)
இனங்காணல்
நிறம்Dark red, bright red
படிக இயல்புமெல்லிய மற்றும் பாரிய திரட்டுகள்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
பிளப்பு{201} இல் சரிபிளவு
விகுவுத் தன்மைவெட்டலம்
மோவின் அளவுகோல் வலிமை2 12
மிளிர்வுவிடாப்பிடி பிசின்
கீற்றுவண்ணம்செங்கல் சிவப்பு
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
ஒப்படர்த்தி5.75,[1] 7.01[2]
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (+)
ஒளிவிலகல் எண்nα = 2.380, nβ = 2.440, nγ = 2.650
இரட்டை ஒளிவிலகல்0.270 (δ)
2V கோணம்58° (அளவிடப்பட்டது)
பிற சிறப்பியல்புகள்உடல்நல அபாயங்கள்: புற்றுநோய் மற்றும் பிறழ்வு குரோமேட்டு அயனியைக் கொண்டுள்ளது
மேற்கோள்கள்[3][1][2][4]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் போனிக்கோகுரோயிட்டு கனிமத்தை Phc[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=போனிக்கோகுரோயிட்டு&oldid=4140475" இலிருந்து மீள்விக்கப்பட்டது