போய்கெல்லெய்டு வினை
போய்கெல்லெய்டு வினை (Boekelheide reaction) என்பது ஒரு மறுசீராக்கல் வினையாகும். இவ்வினையில் α-பிக்கோலின்-என்-ஆக்சைடுகள் மறுசீராக்கல் அடைந்து ஐதராக்சிமெத்தில்பிரிடின்களாக மாறுகின்றன. 1954 ஆம் ஆண்டு வர்கில் போய்கெல்லெய்டு முதன்முதலில் இவ்வினையைக் கண்டுபிடித்தார். இதனால் அவர் பெயரே வினைக்கு சூட்டப்பட்டு போய்கெல்லெய்டு வினை என அழைக்கப்படுகிறது [1]. (~140°செ) வெப்பநிலையில் அசலாக இவ்வினை அசிட்டிக் நீரிலியைக் கொண்டே நிகழ்த்தப்படுகிறது. டிரைபுளோரோ அசிட்டிக் நீரிலியைக் கொண்டும் அறை வெப்பநிலையில் வினையை நிகழ்த்த முடியும் [2]
போய்கெல்லெய்டு வினை | |
---|---|
பெயர் மூலம் | வர்கில் காரல் போய்கெல்லெய்டு |
வினையின் வகை | மறுசீராக்கல் வினை |
.
வினை வழிமுறை
தொகுடிரைபுளோரோ அசிட்டிக் நீரிலியிலிருந்து என்-ஆக்சைடு ஆக்சிசனுக்கு ஓர் அசைல் குழுவை மாற்றும் செயலுடன் போய்கெல்லெய்டு வினையின் வழிமுறை தொடங்குகிறது. பின்னர் டிரைபுளோரோ அசிட்டேட்டு எதிர்மின் அயனியால் α- மெத்தில் கார்பன் புரோட்டான் நீக்கம் செய்யப்படுகின்றது. இதனால் [3.3]-சிக்மாபிணைப்பு நகர்வு மறுசீராக்கல் வினைக்கு உகந்ததாக மூலக்கூறுகள் தயாரிக்கப்பட்டு டிரைபுளோரோ அசிட்டேட்டு மெத்தில்பிரிடின் உருவாகிறது. நீராற்பகுப்பால் டிரைபுளோரோ அசிட்டேட்டு ஐதராக்சி மெத்தில் பிரிடினை வெளியிடுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Boekelheide, V.; Linn, W. J. (March 1954). "Rearrangements of N-Oxides. A Novel Synthesis of Pyridyl Carbinols and Aldehydes". Journal of the American Chemical Society 76 (5): 1286–1291. doi:10.1021/ja01634a026.
- ↑ Fontenas, C.; Bejan, E.; Haddou, H. Aït; Balavoine, G. G. A. (23 September 2006). "The Boekelheide Reaction: Trifluoroacetic Anhydride as a Convenient Acylating Agent". Synthetic Communications 25 (5): 629–633. doi:10.1080/00397919508011399.