போரம்மா உனையன்றி யாரம்மா

போரம்மா உனையன்றி யாரம்மா என்பது ஒரு ஈழப் போராட்டப் பாடல். இப்பாடலை குமாரசாமி, பார்வதி சிவபாதம் இருவரும் இணைந்து பாடியிருந்தார்கள்.

இப்பாடலுக்கான இசையில் பாரம்பரிய உடுக்கு இசைக்கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது.

பாடல் வரிகள்

தொகு

போரம்மா
உனையன்றி யாரம்மா

செந்தணலில் வெந்திடினும் எங்கள்பகை கொல்வோம்
தேடிவரும் எங்கள்பகை ஓடிவிடச் செய்வோம்
ஓடிவிடச்செய்வோம் ஓடிவிடச்செய்வோம்
அண்ணன்பெயர் சொல்வோம் அச்சமில்லை என்போம்
அண்ணன்பெயர் சொல்வோம் அச்சமில்லை என்போம்
அண்ணன்பெயர் சொல்வோம் அச்சமில்லை என்போம்
இங்கு தமிழ்ஈழமது பொங்கிவர வெல்வோம்

அண்ணன் பிரபாகரனின் கண்ணில் எழும்பொறிகள்
ஆணையிடும் போதினிலே ஆடும் கரும்புலிகள்
ஆடும் கரும்புலிகள் ஆடும் கரும்புலிகள்
வெண்சபதம் செய்வோம் வெடிகளென ஆவோம்
வெண்சபதம் செய்வோம் வெடிகளென ஆவோம்
வெண்சபதம் செய்வோம் வெடிகளென ஆவோம்
எங்களுயிர் தந்தெமது எதிரிகளைக் கொல்வோம்

மின்னல் தன்னைக் கண்ணில் கொண்டு
வீசும் காற்றின் வேகம் கொண்டு
மண்ணில் வந்த வேங்கையம்மா போரம்மா
மண்ணில் வந்த வேங்கையம்மா -நாங்கள்
மண்ணில் வந்த வேங்கையம்மா

அண்ணன்சொன்ன வேதம் கேட்டு
விண்ணைக்கூட மண்ணில் வீழ்த்தி
ஆடும் கரும்புலிகளம்மா போரம்மா
ஆடும் கரும்புலிகளம்மா -நாங்கள்
ஆடும் கரும்புலிகளம்மா -நாங்கள்
ஆடும் கரும்புலிகளம்மா