போரம் மார்ட்டு

ஒடிசாவிலுள்ள பேரங்காடி

போரம் மார்ட்டு (Forum Mart) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் அமைந்துள்ள ஒரு வணிக வளாகமாகும். இவ்வணிக வளாகம் இருநூறாயிரம் சதுர அடி பரப்பளவில் பரவியுள்ளது.[1] 2004 ஆம் ஆண்டு பொது மக்களுக்காக திறக்கப்பட்ட இந்த பேரங்காடி ஒடிசாவின் மிகப் பெரிய மற்றும் பழமையான அங்காடிகளில் ஒன்றாகும். போரம் குழுமத்தால் வடிவமைக்கப்பட்ட நான்கு தளங்களில் 200,000 சதுர அடி பரப்பளவில் இந்த வணிக வளாகம் பரவியுள்ளது. போரம் குழுமம் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வணிக வளாகங்களை நிறுவுவதில் பெயர் பெற்ற நிறுவனமாகும்.[2]

போரம் மார்ட்டு
இருப்பிடம்:புவனேசுவரம், ஒடிசா, இந்தியா
அமைவிடம்20°16′N 85°50′E / 20.27°N 85.84°E / 20.27; 85.84
திறப்பு நாள்2004
உருவாக்குநர்போரம் குழுமம்
கடைகள் எண்ணிக்கை50
மொத்த வணிகத் தளப் பரப்பளவு200,000 sq ft (19,000 m2)
தள எண்ணிக்கைG+3
வலைத்தளம்forumprojects.in/projectListing.html

சிற்றுண்டிச்சாலை, உணவு விடுதி, உணவகங்கள், வாகன நிறுத்துமிடம் மற்றும் ஓர் உயர் சந்தை உட்பட தோராயமாக 50 விற்பனை நிலையங்கள் இப்பேரங்காடியில் உள்ளன.[3]

சிறப்புகள் தொகு

  • 100 சதவீத மின்சார வசதி
  • தீ தடுப்பு அமைப்பு
  • வெப்பவேற்றம், காற்றோட்டம், குளிர்பதனம் உள்ளிட்ட வசதிகள்
  • காற்றைக் கையாளும் இயந்திரம்
  • நிலநடுக்கப் பாதுகாப்பு

சிறப்பம்சங்கள் தொகு

பொழுதுபோக்கு தொகு

  • திறந்தவெளி

விருந்தோம்பல் தொகு

  • சிற்றுண்டியகம்
  • தாமே பரிமாறிக் கொள்ளும் சிற்றுண்டியகம்
  • உணவகங்கள்

வணிகம் தொகு

  • அலுவலகங்கள்

பிற வசதிகள் தொகு

  • உயர் சந்தை
  • துறை சார் முகவர்கள்

தீத்தடுப்பு தொகு

போரம் மார்ட்டு உட்பட 10 பேரங்காடிகளில் ஒடிசா தீயணைப்பு சேவைகள் துறை நடத்திய ஆய்வில் போதுமான தீ பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் பல குறைபாடுகளைக் கண்டறிந்ததாக அறியப்படுகிறது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "Forum Mart – Bhubaneswar – A Review". பார்க்கப்பட்ட நாள் 23 May 2018.
  2. "Completed Projects - Forum Group". பார்க்கப்பட்ட நாள் 23 May 2018.
  3. "Stores in Forum Mart Mall - Bhubaneswar". பார்க்கப்பட்ட நாள் 23 May 2018.
  4. "Odisha Fire Services: Fire safety check exposes eight shopping malls". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-07-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போரம்_மார்ட்டு&oldid=3814393" இலிருந்து மீள்விக்கப்பட்டது