போரான் குறைபாடு (மருத்துவம்)

போரான் பற்றாக்குறையால் விலங்குகளுக்கு வரும் ஒரு நோய்

போரான் குறைபாடு (Boron deficiency) என்பது போரான் பற்றாக்குறை காரணமாக விலங்குகளுக்கு வரும் ஒரு நோயாகும். இப்பற்றாக்குறையால் பன்றிகளுக்கு எலும்பு மற்றும் குருத்தெலும்பில் நோய்பாதிப்பு உண்டாகிறது. மில்லியனுக்கு 50 பகுதிகள் அளவு போரானை உணவுடன் சேர்த்துக் கொடுத்தால் இந்நோயைக் குணப்படுத்தவியலும் என்று 2005 ஆம் ஆண்டு ஆலேன் டி லிமேன் பன்றி மாநாட்டில் இ.வேயின் யான்சன் மற்றும் பலர் தெரிவித்தனர்[1]. மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு தேவைப்படும் போரானின் அளவு குறித்த மதிப்பீடுகள் இன்னும் உறுதிப்படுத்தப்படாமல் உள்ளது.

இதையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Allen D. Leman Swine Conference - Veterinary Continuing Education - the University of Minnesota". Archived from the original on 2009-03-23. பார்க்கப்பட்ட நாள் 2018-12-15.