போரிசு அலெக்சாந்திரோவிச் வொரந்த்சோவ்-வெல்யமினோவ்


பரீசு அலெக்சாந்திரவிச் வரண்சோவ்-வெல்யமீனவ் (உருசியம்: Борис Александрович Воронцов-Вельяминов ஆங்கில மொழி: Boris Aleksandrovich Vorontsov-Velyaminov) (பிப்ரவரி 14, 1904 - ஜனவரி 27, 1994) ஒரு சோவியத்/உருசியரும் வானியற்பியலாளரும் ஆவார். இவரது பெயர் சிலவேளைகளில் வரண்சோவ்-வெல்யமீனவ் எனவும் வழங்கப்படும்.

உடுக்கண வெளித் தூசுகள் ஒளியை உட்கவர்தலைத் தனித்துக் கண்டுபிடித்தார். இதையே இராபெர்ட் ஜூலியசு திரம்பிலர் என்பவரும் தனித்துக் கண்டறிந்தார். இவர் இப்போது வரண்சோவ்-வெல்யமீனவ் பால்வெளிகள் (இது ஊடாட்டப் பால்வெளிகளின் வான்படமாகும்) என வழங்கும் பால்வெளிகளின் அட்டவணையைத் தொகுத்தார். மேலும் இவர் இதைவிட மிகப்பெரியதும் பொதுவானதுமான பால்வெளிகளின் பொது அட்டவணையையும் (இது பால்வெளிகளின் புறவடிவியல் அட்டவணை) தொகுத்தார். இவர் கோளியல் ஒண்முகில்களை ஆய்வு செய்து அவற்றைத் தனிவகையாகப் பிரித்தார். இவர் உருசிய மொழியில் தொடக்கநிலைப் பள்ளிக்கும் உயர்நிலைப் பள்ளிக்கும் தரமான வானியல் பாட நூல்களை எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு