போரோடின் வினை

}} அன்சுடைக்கெர் வினை (Hunsdiecker reaction) அலெக்சாண்டர் போரோடின் கண்டறிந்த காரணத்தால் போரோடின் வினை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இக்கரிம வேதியியல் வினையில் வெள்ளி உப்புகளின் கார்பாக்சிலிக் அமிலங்கள் ஆலசன்களுடன் வினைபுரிந்து கரிம ஆலைடுகள் உருவாகின்றன [1][2][3][4]. ஆலசனேற்ற வினைக்கு இவ்வினை ஓர் உதாரணமாகும். எயின்சு அன்சுடைக்கரும் கிளேர் அன்சுடைக்கரும் சேர்ந்து இவ்வினையைக் கண்டறிந்தனர். ஆனால் முதலில் போரோடின் இக்கண்டுபிடிப்பை வெளியிட்டார். 1861 இல் வெள்ளி அசிட்டேட்டில் இருந்து மெத்தில் புரோமைடைத் இவர் தயாரித்தார் [5].

அன்சுடைக்கெர் வினை
பெயர் மூலம் எயின்சு அன்சுடைக்கெர்
கிளேர் அன்சுடைக்கெர்
வினையின் வகை பதிலீட்டு வினை
அன்சுடைக்கர் வினை

இவ்வினையைக் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன [6][7].

பாதர ஆக்சைடும் இவ்வினை மாற்றத்தை பாதிக்கிறது [8][9].

வினைவழிமுறை

தொகு

அன்சுடைக்கர் வினையின் வினைவழிமுறையில் கரிம இயங்குறுப்பு இடைநிலைகள் பங்கேற்கின்றன என்று நம்பப்படுகிறது. கார்பாக்சிலிக் அமிலத்தின் வெள்ளி உப்பு 1 விரைவாக புரோமினுடன் வினைபுரிந்து அசைல் ஐப்போகாலைட்டு இடைநிலையாக உருவாகிறது 2. ஈரியங்குறுப்பு இணை உருவாக்கம் 3 இயங்குறுப்பு கார்பாக்சிலேற்ற நீக்கத்தை அனுமதித்து ஈரியங்குறுப்பு இணையாக உருவாகிறது 4 . இது விரைவில் மீண்டும் இணைந்து தேவையான ஆலைடாக உருவாகிறது 5. வினையில் உருவாகும் ஆலைடு வகையின் முன்னுரிமை முதல்நிலை> ஈரிணைய> மூவிணைய என்ற போக்கில் உருவாகிறது.

 

வேறுபாடுகள்

தொகு

கார்பாக்சிலிக் அமிலங்களின் வெள்ளி உப்புகள் அயோடினுடன் சேர்ந்து புரியும் வினையை சிமோனினி வினை என்கின்றனர். இவ்வினையை வியன்னா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அடோல்ப் இலைபென்னின் மாணவர் ஏஞ்சலோ சிமோனினி கண்டுபிடித்த காரணத்தால் இப்பெயர் பெற்றது. வினைபொருட்களின் விகிதங்கள் இவ்வினையில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. 1:1 விகிதத்தில் உப்பு மற்றும் அயோடின் பயன்படுத்தப்பட்டால் ஆல்கைல் அயோடைடு உருவாகிறது. 2:1 விகிதமெனில் RCOOR சேர்மமும், 3:2 விகிதமெனில் இரண்டு விளைபொருட்களும் உருவாகின்றன [6][10][11]

 .

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Cläre Hunsdiecker, et al. U.S. Patent # 2,176,181.
  2. Heinz Hunsdiecker; Cläre Hunsdiecker (1942). "Über den Abbau der Salze aliphatischer Säuren durch Brom". Ber. 75 (3): 291–297. doi:10.1002/cber.19420750309. 
  3. Borodin, A. (1861). "Ueber Bromvaleriansäure und Brombuttersäure". Ann. 119: 121–123. doi:10.1002/jlac.18611190113. 
  4. Allen, C. F. H.; Wilson, C. V. (1955). "Methyl 5-bromovalerate". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv3p0578. ; Collective Volume, vol. 3, p. 578
  5. Jack Jie Li (2003). Name Reactions: A Collection of Detailed Mechanisms and Synthetic ... Springer Science & Business Media. p. 328.
  6. 6.0 6.1 Johnson, R. G.; Ingham, R. K. (1956). "The Degradation of Carboxylic Acid Salts by Means of Halogen - the Hunsdiecker Reaction". Chem. Rev. 56 (2): 219–269. doi:10.1021/cr50008a002. 
  7. Wilson, C. V. Org. React. 1957, 9, 341. (Review)
  8. Meek, J. S.; Osuga, D. T. (1973). "Bromocyclopropane". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv5p0126. ; Collective Volume, vol. 5, p. 126
  9. Lampman, G. M.; Aumiller, J. C. (1988). "Mercury(II) oxide-modified Hunsdiecker reaction: 1-Bromo-3-chlorocyclobutane". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv6p0179. ; Collective Volume, vol. 6, p. 179
  10. Simonini, A. (1892). "Über den Abbau der fetten Säuren zu kohlenstoffärmeren Alkoholen". Monatshefte für Chemie 13 (1): 320–325. doi:10.1007/BF01523646. 
  11. Simonini, A. (1893). "Über den Abbau der fetten Säuren zu kohlenstoffärmeren Alkoholen". Monatshefte für Chemie 14 (1): 81–92. doi:10.1007/BF01517859. 

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=போரோடின்_வினை&oldid=3583675" இலிருந்து மீள்விக்கப்பட்டது