போர்க்குழந்தைகள்
போர்க்குழந்தைகள் எனப்படுவது உள்நாட்டில் உள்ள ஆண்/பெண்ணுக்கும், அந்நாட்டில் நிலை கொண்டிருக்கும் அயல்நாட்டு படை வீரருக்கும் பிறக்கும் குழந்தை (போர் புரியவோ அல்லது அங்கு பணியில் வந்துள்ள காரணத்தினால்). இக்குழந்தையின் உள்நாட்டுப் உறவு பெரும்பாலும் தாயாகவே இருந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப் பட்டதாலேயே கர்ப்பம் தரிக்கின்றனர். இப்பெண்கள், எல்லா பண்பாடுகளிலும், எதிரி நாட்டு போர்ப்படை வீரரின், குழந்தையைச் சுமப்பதால், குடும்பத்தாலும், உறவுகளினாலும், சுற்றத்தாலும், புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இரண்டாம் உலகப்போரின் போதும், அதன் பின்னரும், செருமானியப் போர்ப்படையில் இருந்த வீர்ர்களுக்கு அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த இடங்களில் அவர்களின் மூலம், பிறந்த குழந்தைகளைப் போர் குழந்தைகள் என அழைத்தனர்.[1][2][3]
பாகுபாடு
தொகுஎதிரி நாட்டு போர்ப்படை வீரரின் , அல்லது எதிர் நாட்டு படையினருடன் இணக்கமாக இருந்தவரின் குழந்தைகளுக்கும், அவர்கள் பெற்றோரின் போர்க்குற்றங்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. ஆனால் அக்குழந்தைகளை, அவர்கள் வாழும் சமூகம் எதிரி நாட்டவரின் குழந்தையாகப் பார்ப்பதால், அக்குழந்தைகள் சிறு வயது முதலே சமூகத்தில் பழிச்சொற்களுக்கு ஆளாகின்றனர். தாங்கள் புரியாத குற்றத்திற்காக, அவர்கள் குற்ற உணர்ச்சியாலும், அவமானத்தாலும் உழல்கின்றனர்.
போர் முடிந்தவுடன், அக்குழந்தையும், அத்தாயும் அந்நாட்டு மக்களால் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டும், நாட்டை விட்டு துரத்தப்பட்டும் உள்ளனர். இது தவிர அக்குழந்தையின் தாய் மொட்டையடிக்கப்படுகிறார், அவருக்கு வேலை மறுக்கப்படுகிறது. அயல்நாட்டு தேவடியாள் என்று பழிக்கப்படுகிறாள். அக்குழந்தை பள்ளிகளிலும், மற்ற பொதுவிடங்களிலும் புறக்கணிக்ப்படுகின்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Drolshagen, Ebba D (2005), Wehrmachtskinder. Auf der Suche nach dem nie gekannten Vater [Children of German soldiers. Searching for the unknown father] (in ஜெர்மன்), München: Droemer, p. 9
- ↑ Kriegskinder in Europa [War children in Europe], DE: BPB
- ↑ Hagerfors, Anna-Maria (2004-07-10), "Tyskerunger" tvingades bli sexslavar (in ஸ்வீடிஷ்), SE: Dagens Nyheter, archived from the original on 2009-02-21.