போர்சு-திரெக்செல் வளையமாக்கல்

பெயர் வினை

போர்சு-திரெக்செல் வளையமாக்கல் (Borsche–Drechsel cyclization) என்பது டெட்ரா ஐதரோகார்பசோல்களை தயாரிக்க உதவும் ஒரு வேதிவினையாகும். இவ்வினையில் வளையயெக்சனோன் அரைல் ஐதரசோன்கள் அமில வினையூக்க வளையமாக்கல் வினைக்கு உட்படுத்தப்படுகின்றன. முதன்முதலில் 1888 ஆம் ஆண்டு எட்மண்டு திரெக்செல் இவ்வினையைக் குறித்து விவரித்தார்[1]. 1908 ஆம் ஆண்டு வால்டர் போர்சேவும் இவ்வினையைக் குறித்து தெரிவித்தார்[2]

போர்சு-திரெக்செல் வளையமாக்கல்
Borsche–Drechsel cyclization
பெயர் மூலம் வால்டர் போர்சே
எட்மண்டு டிரெக்செல்
வினையின் வகை வளையம் உருவாகும் வினை
இனங்காட்டிகள்
RSC சுட்டெண் RXNO:0000532
போர்சு-திரெக்செல் வளையமாக்கல்

.

போர்சே-திரெக்செல் கார்பசோல் தயாரிப்பு வினையின் நடுப் படிநிலையே போர்சு-திரெக்செல் வளையமாக்கல் வினையாகும். அங்கு முதல்படிநிலையில் பீனைல் ஐதரசீன் வளையயெக்சனோனுடன் சேர்த்து சுருக்கவினைக்கு உட்படுத்தப்பட்டு வளைய்யெக்சனோன் பீனைல் ஐதரசீன் உருவாக்கப்படுகிறது. கடைசி படிநிலையில் விளையும் டெட்ரா ஐதரோகார்பசோல் ஆக்சிசனேற்றப்பட்டு கார்பசோல் உருவாகிறது.

போர்சே-திரெக்செல் கார்பசோல் தயாரிப்பு

மேற்கோள்கள் தொகு

  1. E. Drechsel (1888). "Ueber Elektrolyse des Phenols mit Wechselströmen" (in de). J. Prakt. Chem. 38 (1): 65–74. doi:10.1002/prac.18880380105. 
  2. W. Borsche (1908). "Ueber Tetra- und Hexahydrocarbazolverbindungen und eine neue Carbazolsynthese. (Mitbearbeitet von. A. Witte und W. Bothe.)" (in German). Justus Liebigs Ann. Chem. 359 (1–2): 49–80. doi:10.1002/jlac.19083590103.