போர்த்துக்கீசு திறப்பு
சதுரங்க விளையாட்டில் போர்த்துக்கீசு திறப்பு (Portuguese Opening) என்பது,
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
நகர்வுகள் | 1.e4 e5 2.Bb5 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம் | C20 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம் | திறந்த ஆட்டம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
Chessgames.com opening explorer |
1. e4 e5
2. Bb5
என்ற ஆரம்ப நகர்வுகளுடன் தொடங்குகிறது. இத்தொடக்கம் ஓர் அசாதாரண வகை சதுரங்கத் தொடக்கம் ஆகும். உருய் உலோப்பசு வகை தொடக்க ஆட்டத்திலிருந்து (1.e4 e5 2.Nf3 Nc6 3.Bb5), குதிரையை Nf3 ஆடுவதை தாமதப்படுத்தும் நகர்வினால் இத்தொடக்கம் மாறுபடுகிறது. இதனால், வெள்ளை ஆட்டக்காரர் தன்னுடைய எண்னத்தில் f-சிப்பாயை f2–f4 நகர்த்துவதற்கான சாத்தியம் உள்ளதாகவே நினைக்க வைக்கிறார். e5 சிப்பாயை பரிமாற்றம் செய்துகொள்ள அழுத்தமேதும் வெள்ளை கொடுக்காததால் கருப்பு ஆட்டக்காரர் சுதந்திரமாக எந்த நகர்வையும் செய்யும் நிலையில் இருக்கிறார்.
வரிசைகள்
தொகுஒருவேளை கருப்பு 2...Nf6, என்று விளையாடினால், வெள்ளை 3.d4 என்ற நகர்வின் மூலமாக ஒரு பலியாட்டம் ஆட முயற்சிக்கலாம். கருப்பு 2...Nc6, என்று விளையாடும் வரிசையைத் தேர்ந்தெடுத்தால், வெள்ளை 3.Nf3 என்று நகர்த்தி ஆட்டத்தின் போக்கை உருய் உலோப்பசு வகை ஆட்டமாக மாற்றிக்கொள்ள முடியும். ஆனால், பெரும்பாலும் 2...c6 என்ற நகர்வைச் செய்து வெள்ளை அமைச்சருக்கு ஓர் உதை கொடுப்பது பிரபலமான முயற்சியாக உள்ளது. இவ்வுதை கொடுக்கப்பட்டால் ஆட்டம் 3.Ba4 Nf6 எனத் தொடர்கிறது. இந்நிலையில் வெள்ளையின் நான்காவது நகர்வு 4.Nc3 அல்லது 4.Qe2 என்பதாக இருக்க முடியும்.
இத்தொடக்கம் 2.Nf3. நகர்வை வெள்ளை விளையாட மறந்த உருய் உலோப்பசு தொடக்கம் போல உள்ளதாக கிரகாம் பர்கெசு குறிப்பிடுகிறார். இருந்தபோதிலும் போர்த்துக்கீசு தொடக்கம் ஆரம்பத்தில் தோன்றியதைப் போல மோசமான தொடக்கமோ அர்த்தமற்ற நகர்வுகளோ கொண்டதல்ல. கருப்பு எச்சரிக்கையுடன் ஆட்டத்தைத் தொடர வேண்டியது அவசியம் என்பதையே சுட்டுகிறது.
மேற்கோள்கள்
தொகு- Burgess, Graham (2000). The Mammoth Book of Chess. Carroll & Graf. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7867-0725-9.