போர்ப்ஸ்

அமெரிக்க வணிக இதழ்

போர்ப்ஸ் (Forbes) ஒரு தனியார் பத்திரிக்கை நிறுவனமாகும். இந்நிறுவனம் 1917ம் ஆண்டு நியூயார்க்கில் பி.சி போர்ப்ஸ் (Bertie Charles Forbes) என்பவரால் தொடங்கப்பட்டது. வாரமிருமுறை வெளிவரும் இப்பத்திரிக்கை சுமார் 900,000 பிரதிகள் விற்பனையாகின்றது. போர்ப்ஸ்.காம் (forbes.com) இதன் இணையதள பதிப்பகும். சுமாராக 18 மில்லியன் மக்கள் ஒவ்வொருமாதமும் இதன் இணைய தளத்திற்கு வருகை தருகின்றார்கள். இப்பத்திரிக்கை 11 உலக மொழிகளில் சீனா, இந்தியா, இந்தோனேசியா,இஸ்ரேல், கொரியா, போலாந்து, ரஷ்யா, ரோமானியா மற்றும் துருக்கி போன்ற நாடுகளிலும் வெளிவருகின்றது. இவைதவிர ரியல்கிளியர்பாலிடிக்ஸ், ரியல்கிளியர்மார்க்கெட், ரியல்கிளியர்ஸ்போர்ட்ஸ், இன்வெஸ்ரோபிடியா, போன்றவை போர்ப்ஸ் குழுமத்தால் நடாத்தப்படும் பிற இணையதள பத்திரிக்கைகளாகும். இந்நிறுவனம் வருடம் தோறும் உலக அளவில் சிறந்த நிறுவனங்ளையும், மனிதர்களையும் பட்டியலிடுகின்றது. இப்பட்டியலில் இடம்டபெறுவது உலகஅளவில் சிறந்த கெளரவமாக கருதப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்ப்ஸ்&oldid=3157616" இலிருந்து மீள்விக்கப்பட்டது