போலி இறைவாக்கினர்
போலி இறைவாக்கினர் (false prophet) என்பவர் தனக்கு இறைவாக்கு உரைக்கும் வல்லமை அல்லது இறை தூண்டுதல் இருப்பதாகப் பொய்யுரைப்பவர் ஆவார். ஒரே சமயத்தில் ஒரு பிரிவினரால் இறைவாக்கினராக ஏற்கப்படுவோர் பிறரால் போலி இறைவாக்கினராகக் கருதப்படலாம்.
கிறித்தவத்தில்
தொகுகிறித்தவத்தில் போலி இறைவாக்கினர் சாத்தானால் தூண்டப்பட்டவர்கள் என்று கருதப்படுகிறார்கள். விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் பல போலி இறைவாக்கினர்களைக் குறித்த குறிப்பு உள்ளது. புதிய ஏற்பாட்டின் பல இடங்களில் இறுதி நாட்களில் போலி இறைவாக்கினர் பலர் தோன்றுவர் என இயேசு எச்சரித்ததாக சொல்லப்பட்டுள்ளது.[1]
இசுலாமிய சமயத்தில்
தொகுஇசுலாமிய சமயத்தினரைப் பொறுத்த வரை முகம்மது நபியே இறுதி இறைத்தூதர் ஆவார். எனவே அவருக்குப் பின்னர், இறைத்தூதர் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் எவரும் போலிகளே ஆவர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ மத்தேயு 7:15–23