ப. காளிமுத்து

ப. காளிமுத்து (P. Kalimuthu) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் கவிஞர் ஆவார்.பொள்ளாச்சி அருகிலுள்ள பில்சின்னாம்பாளையம் என்ற கிராமம் இவருடைய சொந்த ஊராகும். 2022 ஆம் ஆண்டுக்கான இளம் எழுத்தாளர்களுக்கான சாகித்திய அகாதமியின் யுவ புரசுகார் விருதுக்கு ப. காளிமுத்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தனித்திருக்கும் அரளிகளின் மதியம் என்ற கவிதைத் தொகுப்புக்காக இவ்விருது வழங்கப்படுகிறது. இக்கவிதை நூல் இவருடைய முதலாவது கவிதைத் தொகுப்பு என்பது குறிப்பிடத் தக்கதாகும்.[1]

வாழ்க்கைக் குறிப்பு தொகு

பொள்ளாச்சியை அடுத்த பில்சின்னாம்பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி, சரசுவதி தம்பதி காளிமுத்துவின் பெற்றோர்களாவர். கணினி அறிவியல் பாடத்தில் இளநிலை பட்டம் படித்துள்ளார். அறிவுச்சோலை கல்வி விழிப்புணர்வு மையத்தின் நிறுவனர் அம்சப்ரியாவுடன் இணைந்து பில்சின்னாம்பாளையத்தில் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "கவிஞர் ப. காளிமுத்துவுக்கு யுவ புரசுகார் விருது அறிவிப்பு". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2022/aug/24/yuva-puraskar-award-announcement-for-kalimuthu-3904008.html. பார்த்த நாள்: 27 August 2022. 
  2. ""மிகுந்த மகிழ்ச்சி" - யுவபுரஸ்கார் விருது பெறும் கவிஞர் காளிமுத்து". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-08-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._காளிமுத்து&oldid=3517396" இலிருந்து மீள்விக்கப்பட்டது