மகாஜன எக்சத் பெரமுன (1956)

மகாஜன எக்சத் பெரமுன (Mahajana Eksath Peramuna, மக்கள் ஐக்கிய முன்னணி) என்பது 1956 ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்ட ஒரு கூட்டணி அரசியல் கட்சியாகும். இக்கூட்டணியில் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா தலைமையிலான இலங்கை சுதந்திரக் கட்சி, பிலிப் குணவர்தனா தலைமையில் விப்லவகாரி லங்கா சமசமாஜக் கட்சி, டபிள்யூ. தகநாயக்கா தலைமையில் சிங்கள பாசா பெரமுன (சிங்கள மொழி முன்னணி) ஆகிய கட்சிகள் இணைந்தன.

மக்கள் ஐக்கிய முன்னணி
தலைவர்எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா
நிறுவனர்எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா
தொடக்கம்1956
கலைப்பு1959
தேர்தல் சின்னம்
கை

இக்கூட்டணி 1956 தேர்தல்களில் போட்டியிட்டு ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனாலும், 1959 மே மாதத்தில் பிலிப் குணவர்தனா, வில்லியம் டி சில்வா ஆகியோர் அரசில் இருந்து விலகியதை அடுத்து இக்கூட்டணி உடைந்தது. வில்பகாரி லங்கா சமசமாஜக் கட்சி எதிரணியில் இணைந்தது.

பிலிப் குணவர்தனா புதிய கட்சியை ஆரம்பித்து மகாஜன எக்சத் பெரமுன என்ற பெயரிலேயே அதனைக் கொண்டு நடத்தினார்.