மகாமேரு மாளிகை

நாகர்கோவில் நகராட்சி சின்னமாக விளங்கும் மகாமேரு மாளிகையும் பல்வேறு சரித்திர தகவல்களை தாங்கியே நிற்கிறது. நாகராஜா கோவிலின் தெற்கு வாயிலாக இந்த மாளிகை உள்ளது. 18-ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்டு வந்த வேணாட்டு வேந்தர் அனுஷம் திருநாள் மார்த்தாண்ட வர்மா பட்டத்திற்கு வருவதற்கு முன்பு அவரது பகைவர்கள் அவரைக் கொல்ல பல சதிகள் செய்தனர். அவர்களில் முக்கியமானவர் பப்புத்தம்பி. ஒரு நாள் நாகராஜா கோவிலின் தெற்கு வாயிலின் மாடியில் இளவரசர் மார்த்தாண்ட வர்மா உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் அவரது எதிரியான பப்புத்தம்பி இதை எப்படியோ அறிந்து மாடிக்கு ஏறிச்சென்று வாளால் வெட்ட முயன்றார் என்பதும், கோயில் நந்தவனத்தில் உள்ள பாம்பு ஒன்று அந்த நேரத்தில் அங்கு வந்ததால் வாள் குறி தவறி உத்திரத்தில் பட்டது என்றும், இந்த சப்தம் கேட்டு விழித்த மார்த்தாண்ட வர்மா தன்னை கொல்ல வந்த எதிரியை மடக்கி பிடித்து கொன்றதாக தகவல். இந்த நிகழ்ச்சி நடைபெற்ற ஆண்டு 1733. இந்த வாயிலில் கொலை நடந்ததால் மன்னர் பரம்பரையினர் இந்த வாயில் வழியாக கோயிலுக்கு செல்வதில்லை என இப்பகுதி முதியவர்கள் கூறியதாக வரலாற்று ஆய்வாளர் பத்மனாபன் தெரிவிக்கிறார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. குமரி தகவல் பெட்டகம், தினகரன், நாகர்கோவில் பதிப்பு, 2017 பக்கம் 35
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாமேரு_மாளிகை&oldid=3724863" இலிருந்து மீள்விக்கப்பட்டது