மகாராசகடை பாறை ஓவியங்கள்
மகாராசகடை பாறை ஓவியங்கள், தமிழ்நாடு, கிருட்டிணகிரி மாவட்டத்தில் கிருட்டிணகிரிக்கு அருகில் உள்ள மகாராசகடைப் பகுதியில் காணப்படும் கற்பதுக்கைகளிலும் பிற இடங்களிலும் காணப்படும் ஓவியங்கள் ஆகும். கற்பதுக்கை ஓவியங்கள் அவற்றின் உட்புறத்தில், பின் பகுதியில் உள்ள கற்பலகைகளின் மேற்பரப்பில் வரையப்பட்டுள்ளன. இவ்வோவியங்களில், விலங்குகள், பறவைகள் என்பவற்றின் உருவங்களுடன் மனித உருவங்களும் காணப்படுகின்றன. இங்குள்ள ஓவியங்கள் வெண்ணிறத்தில் அமைந்துள்ளன.[1]
இப்பகுதியில் பூதிகுட்டை என்னும் சிற்றூருக்கு அருகில் காணப்படும் பாறையில் புலியைக் கொன்று வீரச்செயல் புரிபவர்களைப் பாராட்டும் புலிமங்கல ஊர்வலக் காட்சியைக் குறிக்கும் ஓவியங்கள் உள்ளன. புலியின் மேல் மாலையுடன் நிற்கும் வீரர்கள், வாளுடன் செல்லும் வீரர்கள் போன்ற உருவங்கள் இந்த ஓவியத்தில் காணப்படுகின்றன.[2]
இப்பகுதியில் உள்ள ஈசுவரன் குகையில், சிந்துவெளி எழுத்துக்களுக்கும், தமிழ்ப் பிராமி எழுத்துக்களுக்கும் இடைப்பட்ட வகையான எழுத்துக்கள் காணப்படுகின்றன.[3]
மேற்கோள்கள்
தொகுஉசாத்துணைகள்
தொகு- பவுன்துரை, இராசு., தமிழகப் பாறை ஓவியங்கள், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், 2001.
- துரைசாமி, ப., மதிவாணன், இரா., தருமபுரி பாறை ஓவியங்களில் சிந்துவெளி எழுத்துக்கள், சேகர் பதிப்பகம், சென்னை, 2010.