மகாராணி சக்கரவர்த்தி
மகாராணி சக்கரவர்த்தி (Maharani Chakravorty) ஓர் இந்திய மூலக்கூற்று உயிரியலாளர். இவர் முதன்முதலில் இந்தியாவிலும் கிழக்கு ஆசியாவிலும் மீள்சேர்க்கை மரபன் நுட்பங்கள் பற்றிய ஆய்வகப் பாடத்தைத் தொடங்கி நடத்தினார்.[1]
மகாராணி சக்கரவர்த்தி | |
---|---|
பிறப்பு | 1937 பகல்பூர், பீகார் |
இறப்பு | ஜனவரி 2015 |
வாழிடம் | கொல்கத்தா, மேற்கு வங்கம் |
தேசியம் | இந்தியர் |
துறை | மரபுப் பொறியியல், மூலக்கூற்று உயிரியல் |
முனைவர் பட்ட மாணவர்கள் | பேரா. சாகர் காந்தி தேவ் |
விருதுகள் | ஒய். எஸ். நாராயணராவ் விருது, ஜே. சி. சென்குப்தா நினைவு விருது |
துணைவர் | டாக்டர் தேவி பிரசாத் பர்மா |
இளமையும் கல்வியும்
தொகுஇவர் 1937 இல் கொல்கத்தாவில் பிறந்தார். இவர் தன் தாய்வழித் தாத்தாவின் தாக்கத்தால் அறிவியலிலும் கணித்த்திலும் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். இவர் 1950 இல் பள்ளிப் படிப்பை முடித்தார். கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் அறிவியலில் இளவல் பட்டமும் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுவர் பட்டமும் பெற்றார். முனைவர் பட்ட்த்தை கொல்கத்தா போசு நிறுவனத்தில் பெற்றார்.[1]
ஆராய்ச்சி
தொகுஇவர் தன் முனைவர் பட்டத்தை நுண்ணுயிரியல் புரதத் தொகுப்பு எனும் தலைப்பில் கொல்கத்தா போசு நிறுவனத்தில் முனைவர் தேவி பிரசாத் பர்மா அவர்களின் வழிகாட்டுதலில் ஆய்வு மேற்கொண்டு பெற்றார். இவர் தன் முனைவர் ஆய்வினூடாக அசோபாக்டர் வினெலாண்டி நுண்ணுயிரியில் இருந்து எடுத்த துகள்மத்தைப் பயன்படுத்தி உயிர்க்கலம் சாராது புரதம் தொகுக்கும் முறையையைச் செயல்முறைவழி விளக்கினார். இவர் தன் முதுமுனைவர் பட்ட்த்துக்கான ஆய்வை நியூயார்க் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியில் உள்ள பி. எல். ஒரேக்கர் ஆய்வகத்தில் உயிர்நொதி வேதியியலில் மேற்கொண்டார். இவர் குச்சுயிரியலிலும் நச்சுயிரியலிலும் சிறப்பு பயிற்சி அமெரிக்க இலாங் ஐலண்டு நகர கோல்டு சுப்பிரிங் ஆர்பர் ஆய்வகத்தில் எடுத்தார்.[2]
ஆய்வுகளை முடித்த்தம் இந்தியாவுக்குத் திரும்பிய இவர், போசு நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார்.அங்கு ஒருகல உயிரிகளின் வளர்சிதை மாற்றம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார்.பின்னர், வாரணவாசி இந்துப் பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியியல் துறையில் சேர்ந்தார். இங்கு இவர் ஓம்புயிரி ஊடாக நிகழும் இருவகை நச்சுயிரி இனப்பெருக்கத்தின் உயிர்வேதியியல் வேறுபாடுகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டார்.
தகைமைகளும் விருதுகளும்
தொகு- பனாரசு அல்லது வாரணவாசி இந்து பல்கலைக்கழகத்தின் மருத்துவ அறிவியல் நிறுவனத் தகைமைச் சான்றிதழ் (1975–76)
- * பனாரசு அல்லது வாரணவாசி இந்து பல்கலைக்கழகத்தின் மருத்துவ அறிவியல் நிறுவனச் சிறந்த ஆய்வு விருது (1979)
- இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் இட்சானிகா பேச்சாற்றல் விருது (1979)
- இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் ஒய். எஸ். நாராயணராவ் விருது (1981
- இந்திய மருத்துவ மன்றத்தின் அரி ஓம் ஆசிரம அலெம்பிக் ஆராய்ச்சி விருது (1981)
- ஜே. சி. சென்குப்தா நினைவு விருது
- பேராசிரியர் தர்சன் அரங்கநாதன் நினைவு விருது (2007), இந்திய தேசிய அறிவியல் கழகம்.
இவர் தன்னுடன் ஆய்வுசெய்த அறிவியலாளரான முனைவர் தேவி பிரசாத் பர்மாவை மணந்தார். இவர்கட்கு இரு குழந்தைகள் உண்டு.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Chakravorthy, Maharani. "Why and how I became a scientist" (PDF). Lilavati's daughters. பார்க்கப்பட்ட நாள் 25 November 2012.
- ↑ "Author Profile : Maharani Chakraborthy". Pearson. பார்க்கப்பட்ட நாள் 25 November 2012.