மகாவீர் சுவாமி வனவிலங்கு காப்பகம்
மகாவீர் சுவாமி வனவிலங்கு காப்பகம் (Mahavir Swami Wildlife Sanctuary) இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பல வனவிலங்கு சரணாலயங்களில் ஒன்றாகும். இது ஜான்சியிலிருந்து 125 கி.மீ. தொலைவிலும், இலலித்பூரிலிருந்து 33 கி.மீ. தொலைவிலும் உள்ளது.[1] இந்தச் சரணாலயம் 5.4 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது. ஜான்சி புந்தேல்கண்ட் பிராந்தியத்தின் அற்புதமான நுழைவாயிலாக இது உள்ளது. மேலும் இது புகழ்பெற்ற இராணி லட்சுமி பாய் அவர்களால் பிரபலப்படுத்தப்பட்டுள்ளது.
இங்குக் பல்வேறு வகையான பறவைகள் தவிர, சிறுத்தை, நீலான், காட்டுப்பன்றி, கடமான், கருப்பு மான், கரடி, நரி, குரங்குகள் ஆகியவையும் உள்ளன. நவம்பர் முதல் ஏப்ரல் வரை இங்கு வருகை தருவது சிறந்தது. தங்குமிட வசதிகளை வழங்க வன ஓய்வு இல்லம் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mahavir Swami Wildlife Sanctuary". upforest.gov.in. Forest and Wildlife Department, Government of Uttar Pradesh. பார்க்கப்பட்ட நாள் 6 February 2017.