மகா சிவராத்திரி கற்பம்

மகா சிவராத்திரி கற்பம் [1] [2] என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மறைஞான சம்பந்தரால் எழுதப்பட்ட நூல்களில் ஒன்று. மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி நாள் மகா சிவராத்திரி என்னும் நோன்பு நாளாக சிவன்குடி மக்கள் வழிபடுவர். இதனை வழிபடும் நியமங்கள் எவை, இதனை வழிபடுவதால் பெறும் பேறுகள் இவை, இந்த நாளில் நோன்பிருந்து பேறு பெற்றவர்கள் இன்னின்னார் என்னும் கதைகள் முதலான செய்திகள் இந்த நூலில் கூறப்பட்டுள்ளன. இந்த நூல் 39 குறட்பாக்களைக் கொண்ட ஒரு சிறு நூல்.

அடிக்குறிப்புதொகு
  1. கற்பம் என்னும் சொல் கடைப்பிடிக்கப்படவேண்டிய நோன்புக் கல்வியைக் குறிக்கும். இது தாய் வயிற்றில் இருக்கும் 'கற்பம்' போல குறிப்பிட்ட நாளுக்கு ஏற்பட்டிருக்கும் கற்பம்
  2. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 183.