மகிழூர் சரஸ்வதி வித்தியாலயம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்புக் கல்விவலயத்தில் மண்முனை தெற்கு எருவில் கோட்டத்தில் மகிழூர் சரஸ்வதி வித்தியாலயம் அமைந்துள்ளது. பட்டிருப்புத் தொகுதியின் முதலாவது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த எதிர்மன்னசிங்கம் தனது காணியை நன்கொடையாக வழங்க, இப்பாடசாலையானது 1951 ஆம் ஆண்டு சனவரி 1 அன்று ஆரம்பிக்கப்பட்டது.