மகுடம்
இந்து சமய சிற்பகலையில் இறை உருவங்களுக்கு தலையில் மகுடம் எனும் அணிகலனை அணிவித்திருப்பர். மகுடத்தை பண்டைய காலத்தில் அரசர்களோ, தலைவர்களோ தங்கள் பதவியினை குறிப்பதற்காக அணிந்துள்ளனர்.
வகைகள்
தொகுஇந்த மகுட அணிகலன் ,கிரீட மகுடம், கரண்ட மகுடம், சடா மகுடம், ஜுவால மகுடம் என பல வகைகளில் உள்ளன.[1] சில இறைகளுக்கென தனித்துவமான மகுடங்கள் உள்ளன. உதாரணமாக சிவபெருமானுக்கு அவருடைய சடையையே மகுடம் போல அமைப்பது சடாமகுடம் எனப்படுகிறது. சில இடங்களில் விரிசடையுடன் சிவபெருமான் சிற்பங்கள் அமைந்துள்ளன. பெண் தெய்வங்கள், முருகன், விநாயகர் ஆகியோர் கரண்ட மகுடத்துடன் காணப்படுகின்றனர்.
- ஜடாமகுடம்
- ஜடா பாரம்
- ஜடா மண்டலம்
- ஜடாபந்தம்
- சர்ப்ப மௌலி
- விரிசடை
- சுடர்முடி
- கிரீட மகுடம்
- சிரஸ்திரகம்
- குந்தளம்
- தம்மில்லம் அல்லது தமிழம்
- அளக சூடம்
- கரண்ட மகுடம்
ஆதாரங்கள்
தொகு- ↑ இறை உருவங்களுக்கான அணிகலன்கள் - தினகரன் - பிப்ரவரி,21, 2011