மகுட அடவுகள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மகுட அடவுகள் பரதநாட்டியத்தில் ஜதிக் கோர்வைகள், ஸ்வரக் கோர்வைகள் ஆகியவற்றின் இறுதியில் கையாளப்படுகின்றன. இவை அனேகமாக மூன்று முறை அல்லது மூன்றின் மடங்குகளில் செய்யப்பட்டு தாளப் பிரஸ்தாரங்களை வெளிப்படுத்தி அடவுக் கோர்வைகளிற்கு இறுதியில் அழகைக் கொடுப்பதால் இவை மகுட அடவுகள் என அழைக்கப்படுகின்றன. இவை மண்டல ஸ்தானத்தில் செய்யப்படுகின்றன. இம்மகுட அடவுகள் கிட தஹ தரி கிட தொம், ததிங்கிணதொம் என்பவையாகும். இவை இரண்டுமே பாதங்களைப் பொருத்தமட்டில் ஒரே விதமாகத்தான் விளங்குகின்றன. கை அசைவால் உருவமும் பெயரும் மாறுபடுகின்றன.