மகேந்திரபாலன்

மகேந்திரபாலன் (Mahendrapala) (ஆட்சி கி.பி. 845–860 ) இந்திய துணைக் கண்டத்தின் வங்காளப் பகுதியிக்ல் ஆட்சியிலிருந்த பால வம்சத்தின் நான்காவது அரசர் ஆவார். இவர் தேவபாலன் மற்றும் அவரது ராணி மகதாவின் மகன்.

ஆட்சி

தொகு
 
கொல்கத்தாவில் உள்ள மாநில தொல்லியல் அருங்காட்சியகத்தில் மகேந்திரபாலனின் செப்புத் தகடு கல்வெட்டு.

மகேந்திரபாலன் சில பாலப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளார். ஆனால் முன்னர், வரலாற்றாசிரியர்கள் இந்த குறிப்புகள் கூர்ஜர-பிரதிகார மன்னர் முதலாம் மகேந்திரபாலனைக் குறிப்பிடுவதாக நம்பினர். இருப்பினும், மகேந்திரபாலனால் வழங்கப்பட்ட ஜக்ஜீவன்பூர் செப்புத் தகடு சாசனத்தின் கண்டுபிடிப்பு, இவர் தேவபாலனுக்குப் பிறகு வந்த ஒரு தனித்துவமான பாலப் பேரரசர் என்பதைத் தெளிவுபடுத்தியது. [1] மகேந்திரபாலனின் ஆட்சியின் 7வது ஆண்டில் (கி.பி. 854 என்று நம்பப்படுகிறது) வெளியிடப்பட்ட சாசனம், மகேந்திரபாலனின் மகாசேனாபதி ("பெரிய தளபதி") வஜ்ரதேவனால் நந்தாதிர்கிகா உத்ரங்காவில் ஒரு மடாலயம் கட்டப்பட்டதைக் குறிப்பிடுகிறது. [2] மானியம் இவரது 7வது ஆட்சியாண்டில் தேதியிடப்பட்டுள்ளது.[3]

மகேந்திரபாலனுக்குப் பிறகு முதலாம் சுரபாலன் பதவியேற்றார் [4] ஜக்ஜீவன்பூர் கல்வெட்டின் படி, சுரபாலன் மகேந்திரபாலனின் இளைய சகோதரர் மற்றும் அரச தூதுவர். [5]

மகேந்திரபாலன் வங்காளம், பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவற்றின் மீது கட்டுப்பாட்டை தக்க வைத்துக் கொண்டதாகத் தெரிகிறது. இவர் ஹுனர்கள் மற்றும் உட்கலர்களுக்கு எதிராக மேலும் போர்களை மேற்கொண்டார். மேலும் தனது நாட்டை அப்படியே தனது இளைய சகோதரரும் வாரிசுமான முதலாம் சுரபாலனுக்கு வழங்கினார். [6]

மேற்கோள்கள்

தொகு
  1. Akṣayanīvī: Essays Presented to Dr. Debala Mitra in Admiration of Her Scholarly Contributions. Sri Satguru Publications.
  2. Bengal museum to reconstruct excavated Buddhist site
  3. "Jagjivanpur, A newly discovered Buddhist site in west Bengal". Information & Cultural Affairs Department, Government of West Bengal website. Archived from the original on August 9, 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-10-18.
  4. Studies in Archaeology: Papers Presented in Memory of P.C. Dasgupta. Books & Books.
  5. A Sourcebook of Indian Civilization. Orient Blackswan.
  6. Bhattacharya, Suresh Chandra, Pāla Kings in the Badal Praśasti — A Stock-Taking, Journal of Ancient Indian History, University of Calcutta, Vol. XXIV, 2007-08, pp. 73-82.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேந்திரபாலன்&oldid=3812351" இலிருந்து மீள்விக்கப்பட்டது