மகேஷி ராமசாமி

மகேஷி என். ராமசாமி, இலங்கையைப் பூர்விகமாகக் கொண்ட பிரித்தானிய மருத்துவரும், விரிவுரையாளருமாவார். இவர் தற்போது ஆக்ஸ்போர்டு தடுப்பூசி குழுவில் தலைமை புலனாய்வாளர்களில் ஒருவராக பணியாற்றி வருகிறார். [1]

மகேஷி ராமசாமி
பிறப்பு
குடியுரிமைபிரித்தானியர்
தேசியம்இலங்கை - பிரித்தானியர்
Alma materகிறிஸ்ட் கல்லூரி, கேம்பிரிட்ஜ், கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
வாதாம் கல்லூரி, ஆக்ஸ்போர்டு
அறியப்பட்டதுஅறிவியலாளர்

வரலாறு

தொகு

இலங்கையைச் சார்ந்த தமிழரும், அவுஸ்திரேலிய கல்வியாளரும் அறிவியலாளருமான, ரஞ்சன் ராமசாமி மற்றும் சிங்கள இனத்தைச் சார்ந்த சமரநாயக் என்ற மந்திரி ராமசாமி இவரது பெற்றோர் ஆவர். இருவருமே புகழ்பெற்ற விஞ்ஞானிகள் ஆவர். [2]

தொழில்

தொகு

மருத்துவக் கல்வியை இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ், கிறிஸ்ட் கல்லூரியில் முடித்துள்ள மகேஷி  லண்டன், ஆக்ஸ்போர்டில் தொற்று நோய்கள் மற்றும் பொது உள் மருத்துவத்தில் பயிற்சி பெற்றுள்ளார். மேலும் [3] ஆக்ஸ்போர்டில் உள்ள வாதாம் கல்லூரியில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். [4]

இவர் தற்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் NHS அறக்கட்டளையில் ஆலோசக மருத்துவராகவும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மாக்டலன் கல்லூரியில் மூத்த கௌரவ மருத்துவ விரிவுரையாளராகவும் பணியாற்றிவருகிறார். [4]

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி குழுவில் முன்னணி விஞ்ஞானிகளில் ஒருவராக கருதப்படும் இவர், கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தகுந்த நோயெதிர்ப்பு தடுப்பூசியை உருவாக்கிய குழுவில் பணியாற்றியுள்ளார்.[5][6]

வளர்ச்சி நிலையில் உள்ள கோவிட் தடுப்பூசியின் மருத்துவ நடைமுறை குறித்து பிரபல மருத்துவ இதழான தி லான்செட் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் இவரின் பங்களிப்பைக் குறிப்பிடப்பட்டு அங்கீகரித்துள்ளது. [2]

மேற்கோள்கள்

தொகு
  1. Lahiru Pothmulla (November 21, 2020). "SL born Dr Ramasamy an investigator in Oxford COVID-19 Vaccine Group". www.themorning.lk. பார்க்கப்பட்ட நாள் 2020-12-16.
  2. 2.0 2.1 "Sri Lankan born medical professional at the forefront of COVID-19 vaccine development". Sri Lanka News - Newsfirst (in ஆங்கிலம்). 2020-11-21. பார்க்கப்பட்ட நாள் 2020-12-16.
  3. "Maheshi Ramasamy". www.ovg.ox.ac.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-16.
  4. 4.0 4.1 "Dr Maheshi Ramasamy | Magdalen College Oxford". www.magd.ox.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 2020-12-16.
  5. "Oxford Covid-19 vaccine shows promise among over 70s in trials". www.irishtimes.com. பார்க்கப்பட்ட நாள் 2020-12-16.
  6. "Covid: Oxford vaccine shows 'encouraging' immune response in older adults". https://www.bbc.com/news/health-54993652. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேஷி_ராமசாமி&oldid=3672409" இலிருந்து மீள்விக்கப்பட்டது