மகேஷ் கனோடியா
மகேஷ் கனோடியா (Mahesh Kanodia 27 சனவரி 1937-25 அக்டோபர் 2020) இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாடகரும் அரசியல்வாதியும் ஆவார்.
மகேஷ் கனோடியா | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 1991-1999, 2004-2009 | |
தொகுதி | பதான் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கனோடா, பிரித்தானிய இந்தியா | 27 சனவரி 1937
இறப்பு | 25 அக்டோபர் 2020 காந்திநகர், குசராத்து, இந்தியா | (அகவை 83)
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | உமா கனோடியா (தி. 1960) |
பிள்ளைகள் | பூஜா கனோடியா |
உறவினர் | நரேஷ் கனோடியா (சகோதரர்) இத்து கனோடியா (மருமகன்) |
வேலை | பாடகர், இசையமைப்பாளர், அரசியல்வாதி |
மூலம்: [1] |
வாழ்க்கை
தொகுமகேஷ் கனோடியா 27 சனவரி 1937 இல் இந்தியாவின் குஜராத்தின் பதான் மாவட்டத்தில் உள்ள கனோடா கிராமத்தில் பிறந்தார். அகமதாபாத்தில் உள்ள சாபூர் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைப் பயின்றார்.[1] குஜராத்தித் திரைப்படத்துறையில் நான்கு தசாப்தங்களாக இசைக்கலைஞராகவும் பாடகராகவும் இசையமைப்பாளராகவும் பணியாற்றினார். இவர் தனது சகோதரரும் நடிகரும் பாடகருமான நரேஷ் கனோடியாவுடன் இணைந்து நடித்தார்.[2][1]
பாரதிய ஜனதா கட்சி சார்பாக பதான் தொகுதியில் போட்டியிட்டு நான்கு முறை மக்களவையில் பணியாற்றினார்.[2][1] சவுனா ஹ்ருதயமா ஹம்மேஷ்ஃ மகேஷ்-நரேஷ், சகோதரர்கள் பற்றிய சுயசரிதை குஜராத்தி புத்தகம் 2011 இல் வெளியிடப்பட்டது.[3]
இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்றின் போது கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட இவர் 2020 அக்டோபர் 25 இல் காந்திநகரில் காலமானார். இவர் இறப்பதற்கு முன்பு ஆறு ஆண்டுகளாக முடக்கு வாதத்தில் பாதிக்கப்பட்டிருந்தார்.[4][5] இவரது இளைய சகோதரர் நரேஷ் கனோடியா இரண்டு நாட்களுக்குப் பிறகு கோவிட் நோயால் இறந்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகு1960 சனவரி 1 இல் உமா என்பவரை மணந்தார்.[1] இவர்களது மகள் பூஜா, ஒரு பாடகியாவார், இவர் 2015 இல் இறந்தார்.[2] இவரது மருமகன் இத்து கனோடியா குஜராத் சட்டப்பேரவையில் சட்டசபை உறுப்பினர் ஆவார்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Biographical sketch, Member of Parliament, 14th Lok Sabha". Parliament of India. Archived from the original on 2004-09-05. பார்க்கப்பட்ட நாள் 2020-10-27.
- ↑ 2.0 2.1 2.2 "Veteran Gujarati singer Mahesh Kanodia dead". Ahmedabad Mirror. 2020-10-26. பார்க்கப்பட்ட நாள் 2020-10-27.
- ↑ "Album:Modi releases book of Naresh Kanodia". DeshGujarat. 28 January 2011. பார்க்கப்பட்ட நாள் 21 July 2017.
- ↑ Anshuman, Kumar. "Covid-19 wreaks havoc on Indian politicians". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/covid-19-wreaks-havoc-on-indian-politicians/articleshow/79534265.cms.
- ↑ https://news4gujarati.com/famous-gujarat-singer-mahesh-kanodia-passes-away-news4-gujarati/ வார்ப்புரு:Bare URL inline
- ↑ "Veteran Gujarati Film Musician, Former MP Mahesh Kanodia Dies At 83". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2020-10-27.