மக்கள் குறை தீர்க்கும் நாள்

மக்கள் குறை தீர்க்கும் நாள் என்பது தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் அடிப்படைச் சேவைகளில் மக்கள் குறைகளைச் சந்திக்கும்போது, உரிய அலுவலர்களை அணுகிக் குறைகளைத் தெரிவிக்கும் நாளாகும். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று, “மக்கள் குறை தீர்க்கும் நாள்” கடைபிடிக்கப்படுகிறது. அன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் அந்தந்த பகுதிகளில் வாழ்கிற மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம். இது தவிர, மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர் மாதத்தில் ஒரு நாள் ஒரு குக்கிராமத்திற்கு நேரடியாகச் சென்று முகாமிடுவர். மாவட்டத் தலைநகருக்குச் செல்லும் வாய்ப்பும் வசதியும் இல்லாத அப்பகுதி-சுற்று வட்டார ஏழை மக்கள் இந்த முகாமைப் பயன்கடுத்தத் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக தெரிவிக்கலாம். இந்த நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கிலும் நடத்தப்படுவதுண்டு. [1] அவர்கள் குறைகளுக்கு அந்த முகாமிலேயே தீர்வு காண்கிற நாளாக ”மக்கள் தொடர்புத் திட்ட நாள்” அமைகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்". செய்தி. தினமணி. பார்க்கப்பட்ட நாள் 16 ஆகத்து 2017.
  2. தமிழ்நாடு பாடநூல் கழகம், சென்னை, பதிப்பு 2017, ஆறாம் வகுப்பு, பருவம் 2, தொகுதி 2, பக்கம் 113