மக்கள் சக்தி இயக்கம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மக்கள் சக்தி இயக்கம் மக்களின் வளர்ச்சியை மையப்படுத்தும், மக்களை அதிகாரப்படுத்தும் மற்றும் மாற்று அரசியல் நடைமுறைக்கு கொண்டு வரும் நோக்கில் டாக்டர் எம். எஸ். உதயமூர்த்தியால் பிப்ரவரி 1988 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. சமூக அரசியல் மாற்றத்திற்கான இயக்கம் என்ற அறிமுகத்துடன் இந்த இயக்கம் செயல்பட்டு வருகிறது. நதி நீர் இணைப்பினை வலியுறுத்தி இந்த இயக்கம் பலப்பல போராட்டங்களை நிகழ்த்தியுள்ளது. இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற நோக்கில் இந்த இயக்கம் பள்ளி கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தது. இளைஞன் ஒருவன் முரசறைவது போன்ற படம் இந்த இயக்கத்தின் சின்னம் ஆகும். இவ்வியக்கத் தலைமையகம் சென்னை கே.கே.நகரில் உள்ளது. தமிழ்நாடு முழுதும் கிளைகள் கொண்ட இந்த இயக்கத்தில் பலர் உறுப்பினராக உள்ளனர்.
டாக்டர் அ. சண்முகம் 2௦12 ம் ஆண்டிலிருந்து தலைமை ஏற்று நடத்தி வருகிறார்.
இயக்கத்தின் வெள்ளி விழா ஆகஸ்ட் 2013, 11ம் தேதி பம்மல் சங்கரா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கர வித்யாலயா பள்ளியில் இயக்க தலைவர் டாக்டர் அ.சண்முகம் தலைமை ஏற்க, நடந்தேறியது. R.N.ரெங்கநாதன், மாநில பொதுச் செயலாளர் வரவேற்புரை நிகழ்த்தினார். பி.எஸ்.இராகவன் I.A.S சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன், டாக்டர் பழனித்துரை, டாக்டர் க. ப. அறவாணன், நடராஜன் IPS ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். கடந்த 25 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்ட இயக்க செயல்வீரர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.