மக்கள் தமிழ்த் தேசம் கட்சி

மக்கள் தமிழ்த் தேசம் கட்சி (Makkal Tamil Desam Katchi) இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள ஓர் அரசியல் கட்சியாகும் சுருக்கமாக இக்கட்சி மக்கள் தமிழ்த் தேசம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. 2000 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 22-இல் இக்கட்சி நிறுவப்பட்டது.[1] தமிழகத்தில் உள்ள யாதவா இனக்குழுவினை (கோனார், இடையர், இடையான்) அடிப்படையாக இக்கட்சி கொண்டுள்ளது. தமிழ்நாடு யாதவ மகாசபை கட்சிக்கு ஆதரவு ஆதரவளித்தது. கட்சியின் தலைவராக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) முன்னாள் அமைச்சர் இராஜ கண்ணப்பன் இருந்தார். கட்சி நிறுவப்படுவதற்கு முன்னர் இவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.

2001 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மக்கள் தமிழ்த் தேசம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது.

மே 6, 2002 அன்று, இக்கட்சியின் புதுச்சேரி பிரிவு பிரிந்து இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது.

2004ஆம் ஆண்டில் மக்கள் தமிழ்த் தேசம் மக்கள் கூட்டணியில், தமிழ்நாட்டின் மூன்றாவது முன்னணியான ஜனதா தளம் (ஐக்கிய), புதிய தமிழகம் மற்றும் இந்தியாவின் தலித் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் பங்கெடுத்தது. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஒதுக்கி வைத்துவிட்டு, இதற்குப் பதிலாகத் தேர்தலில் பா.ஜ.க-அதிமுக முன்னணியை ஆரம்பித்துவிட்டதால் இதில் அதிருப்தியடைந்த குழுக்களால் உருவாக்கப்பட்டது மக்கள் கூட்டணி. தொடர் தோல்விகளுக்குப் பின்னர் மக்கள் தமிழ்த்தேசம் கட்சியின் நிறுவனர் கட்சியினை கலைத்துவிட்டு 2019ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.[2]

மேற்கோள்கள் தொகு