மங்கம்மாள் சத்திரம், நரிக்குடி

மங்கம்மாள் சத்திரம் என்பது தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் உள்ள ஒரு சத்திரம் ஆகும்.

அமைவிடம்

தொகு

இச்சத்திரம் நரிக்குடி அருகில் மறையூரில் அமைந்துள்ளது. [1].

அமைப்பு

தொகு

இச்சத்திரம் இராணி மங்கம்மாள் ஆட்சியில் கட்டப்பட்டதாகும். அவரும், பிறரும் ஓய்வெடுப்பதற்காகக் கட்டப்பட்டது. இராணி மங்கம்மாளால் ஏற்படுத்தப்பட்டதாகவும், அவரது நினைவாக ஏற்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது அழகிய வேலைப்பாடுகளுடன் பல தூண்களைக் கொண்டுள்ளது. சித்திர வேலைப்பாடுகளும் இதில் உள்ளன. [1] இந்தச் சத்திரத்தில் மிகவும் வேலைப்பாடு நிறைந்த கற்தூண்களில் அழகான சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அழகிய முற்றத்துடன் நடு மண்டபம், 52க்கும் மேற்பட்ட கற்தூண்கள், இரு புறங்களிலும் வாசல்கள் போன்றவை இதன் சிறப்பு அம்சங்களாகும். [2].

தற்போதைய நிலை

தொகு

50 ஆண்டுகளுக்கு முன் மாணவர் பயிலும் பள்ளியாகச் செயல்பட்டு வந்தது. காலப்போக்கில் புனரமைக்காததால் இச்சத்திரம் தற்சமயம் பாழடைந்த நிலையில் உள்ளது. [1] இச்சத்திரத்தையும், காரியாபட்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள சத்திரங்களையும் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. [3] [2]

சான்றுகள்

தொகு

இவற்றையும் காண்க

தொகு