மங்களம் முத்துசாமி

மங்களம் முத்துசாமி (Mangalam Muthuswamy-1937-2007) என்பவர் குறிப்பிடத்தக்க வீணைக் கலைஞர் ஆவார். இவர் ஓர் இசைக் குடும்பத்தில் சிவகங்கையில் பிறந்தார். இவர் ஆரம்பக் கால வீணை பயிற்சியினை இவரது சொந்த தாயிடமிருந்து கற்றுக்கொண்டார். இவரது தாய் சிறீ பல்லவி இராமசாமி ராஜுவின் சீடரான லட்சுமிபாய் அம்மாள் ஆவார்.

மங்களம் முத்துசாமி (1937-2007)

மங்கலம் தனது 'கயிகா' பாணியால் அறியப்பட்டார். இதில் வீணையில் கிட்டத்தட்ட மனித குரலைப் இசைப்பார். எனவே இவர் வீணை மீட்பது கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இவர் 'வீணை விசாலாட்சி' ('தானம்' நிபுணராகக் கருதப்படுபவர்) என்பவரின் பிரதான சீடர் ஆவார்.[1] விஜயநகரத்தைச் சேர்ந்த 'சத்கல சக்ரவர்த்தி' வீணா வெங்கட்ரமண தாசு & வீணை தனம்மாளின் சீடராக இருந்தவர். மேனாள் இந்தியக் குடியரசுத்தலைவர் இரா. வெங்கட்ராமன் முன்னிலையில் வீணையில் இந்திய தேசிய கீதம் இசைத்த அரிய பெருமை இவரைச் சாரும்.

வானொலி மற்றும் தொலைக்காட்சி தொடர்பு

தொகு

மங்களம் தனது முதல் நிகழ்ச்சியினை அனைத்திந்திய வானொலியில் தனது 11 வயதில் நிகழ்த்தினார். இது 1948ஆம் ஆண்டு நிகழ்ந்தது. பின்னர், இரு தசாப்த காலப்பகுதியில், இவர் தொடர்ந்து அனைத்திந்திய வானொலியில் இசை நிகழ்ச்சியினை நிகழ்த்தினார். இறுதியில் "ஏ" தரக் கலைஞராகத் திகழ்ந்தார். பெரும் புகழ் பெற்ற கலைஞரான இவர், 1994ல் வானொலி சங்கீத சம்மேளனம் உள்ளிட்ட அனைத்திந்திய வானொலியின் முக்கியமான நிகழ்ச்சிகளிலும் கலந்துள்ளார். இவர் மும்பை தூர்தர்ஷன் நிலையத்தின் இசை நிகழ்ச்சிகளிலும் கலந்துள்ளார்.

இவர் பல தொலைக்காட்சி ஆவணப்படங்களிலும் நடித்தார். இதில் முக்கியமானது, "கடவுளின் உறைவிடம்" என்பதாகும்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்களம்_முத்துசாமி&oldid=3910271" இலிருந்து மீள்விக்கப்பட்டது