மங்குபாய் சாகன்பாய் படேல்

இந்திய அரசியல்வாதி

மங்குபாய் சாகன்பாய் படேல் (Mangubhai Chhaganbhai Patel) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். குசராத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் தலைவரன இவர் மத்திய பிரதேசத்தின் தற்போதைய மற்றும் 19 வது ஆளுநராக உள்ளார். 2014இல் குசராத்து சட்டமன்றத்தின் துணை சபாநாயகராகப் பணியாற்றினார். முன்பு குஜராத் அரசாங்கத்தில் அமைச்சராக பணியாற்றியுள்ளார்.[1] படேல் நவ்சாரி தொகுதியிலிருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்தியப் பிரதேசத்தின் 19வது ஆளுநராக 6 ஜூலை 2021 அன்று இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார்.[2] [3]

மங்குபாய் சாகன்பாய் படேல்
19வது மத்தியப் பிரதேச ஆளுநர்
பதவியில் உள்ளார்
பதவியில்
6 ஜூலை 2021
முதலமைச்சர்சிவ்ராஜ் சிங் சௌஃகான்
முன்னையவர்ஆனந்திபென் படேல்
குஜராத் அரசின் ஆமைச்சர்
பதவியில்
2002–2013
தொகுதிநவ்சாரி
குசராத்து சட்டப் பேரவையின் துணை சபாநாயகர்
பதவியில்
2013–2017
குசராத்து சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
1998–2017
தொகுதிநவ்சாரி

ஒரு பழங்குடித் தலைவரான இவர் 1990 முதல் 2012 வரை நவ்சாரி சட்டமன்றத் தொகுதியிலிருந்தும், 2012 முதல் 2017 வரை காந்தேவி சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் உறுப்பினரானார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Gujarat Vidhan Sabha". gujaratassembly.gov.in. Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2014-08-11.
  2. Mangubhai Patel is Deputy Speaker of Gujarat Ass | DeshGujarat
  3. Mangubhai C Patel(Bharatiya Janata Party(BJP)):Constituency- NAVSARI(Navsari) - Affidavit Information of Candidate: