மங்கைமடம் வீர நரசிம்மப்பெருமாள் கோயில்
மங்கைமடம் வீர நரசிம்மப்பெருமாள் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அமைந்துள்ள வைணவக்கோயிலாகும்.
அமைவிடம்
தொகுஇக்கோயில் சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் திருக்குறையலூருக்கு அடுத்தபடியாக திருவெண்காட்டிற்கு முன் உள்ளது.
இறைவன், இறைவி
தொகுகிருத யுகத்தில் கர்தபப்ரஜாபதி என்னும் அந்தணராகவும் திரேதா யுகத்தில் உபரிசிரவசு என்னும் சத்திரிய மன்னனாகவும், துவாபர யுகத்தில் வைரமோகன் என்னும் வைசியனாகவும் பிறந்து இங்கு உள்ள பெருமாளை வழிபட்டதால் இங்குள்ள மூலவர் வைரநரசிம்மன் என்றழைக்கப்படுகிறார். [1]
பிற சிறப்புகள்
தொகுதிருவாலி-திருநகரி திவ்யதேசங்களுக்கு முற்பட்ட பெருமையுடைய இத்தலம், பஞ்ச நரசிம்மத்தலங்களில் இரண்டாவது தலமாகும். திருமங்கையாழ்வார் ஓராண்டில் 1008 வைணவர்களுக்கு சிறப்பு செய்து பெருமாளின் அருளைப் பெற்ற தலமாகும். [1]