மங்கோலியத் தொன்மவியல்
மங்கோலியத் தொன்மவியல் என்பது மங்கோலியர்களின் மரபுசார்ந்த சமயம் ஆகும்.
படைப்பு
தொகுபடைப்பு பற்றி ஏராளமான மங்கோலியப் புராணங்கள் உள்ளன. மிகப் பழமையான ஒன்றானது, ஒரு புத்த மத தெய்வமான லாமாவுக்கு உலகை படைத்ததை உரித்தாக்குகிறது. காலம் தொடங்கியபோது நீர் மட்டுமே இருந்தது. சுவர்க்கங்களிலிருந்து லாமா ஒரு இரும்புக் கம்பியுடன் வந்தார். அதைக்கொண்டு நீரைச் சுழற்ற ஆரம்பித்தார். நீரைச் சுழற்ற ஆரம்பித்த பிறகு சுழற்றானது ஒரு காற்று மற்றும் நெருப்பைக் கொண்டு வந்தது. இவை மையத்திலிருந்த நீரைக் கெட்டியானதாக்கி உலகத்தை உருவாக்கின.[1] மற்றொரு கதை, உதன் என்று அழைக்கப்பட்ட ஒரு லாமா சுவர்க்கம் மற்றும் உலகத்தை உருவாக்கியதாகக் கூறுகிறது. உதன் உலகைச் சுவர்க்கத்திலிருந்து பிரித்தார். பிறகு சுவர்க்கம் மற்றும் உலகை ஒன்பது அடுக்குகளாகப் பிரித்தார். ஒன்பது ஆறுகளை உருவாக்கினார். உலகை உருவாக்கிய பிறகு களிமண்ணிலிருந்து முதல் ஆண் மற்றும் பெண் உருவாக்கப்பட்டனர். அவர்களே மனித குலத்தின் முன்னோர் ஆவர்.[2]
மேலும் காண்க
தொகுகுறிப்புகள்
தொகு- ↑ Sproul 1979, ப. 218
- ↑ Nassen-Bayer & Stuart 1992