மச்சகந்தி

மச்சம் என்பது "மீன்" எனவும் கந்தி என்பது "நாற்றம்" எனவும் பொருள்படும். மச்சகந்தி என்பது உடலில் "மீன் நாற்றத்தை உடைய பெண்ணைக் " குறிக்கும். இவள் "தாசன்" என்ற வலைஞனின் வளர்ப்பு மகள் ஆவாள். இவளுடைய அழகில் மயங்கிய பராசர முனிவர், இவளுடைய உடலில் வீசிய மீன் நாற்றத்தைப் போக்கி நறுமணம் வீசச்செய்தார். இவளுடைய பெயரையும் "சத்தியவதி" என்று மாற்றினார். இவளுக்கும் பராசர முனிவருக்கும் பிறந்தவர் வியாசர் என புராணங்கள் கூறுகின்றன. பின்னாளில் சத்தியவதி, சந்தனுவை மணந்தாள். சித்ராங்கதனும் விசித்திரவீரியனும் இவளது மகன்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மச்சகந்தி&oldid=2577409" இருந்து மீள்விக்கப்பட்டது