மஜ்னவீ சரீப் (சிற்றிதழ்)

மஜ்னவீ சரீப் இந்தியா காரைக்காலிலிருந்து 1937ம் ஆண்டில் மாதமிரு முறை வெளிவந்த ஓர் இசுலாமிய இதழாகும். இவ்விதழ் 1941ம் ஆண்டு வரை வெளிவந்தது.

ஆசிரியர் தொகு

  • கா. காஜி முஹம்மது செய்கு ஹுசைன்.

பொருள் தொகு

  • 'மஜ்னவீ சரீப்' என்றால் 'புகழ்ப்பாக்கள்' என்று பொருள்படும்

உள்ளடக்கம் தொகு

இசுலாமியர்களிடையே சில முக்கியமிக்கவர்களையும், முக்கியத்துவ சம்பவங்களை விளக்குவதற்கும் அரபுப் பாக்கள் பாடப்படுவதுண்டு. அப்படிப்பட்ட இப்பாக்கள் இசுலாமியரிடத்தே மிகவும் புகழ்பெற்றவை. இப்படிப்பட்ட பாக்களை விளக்கும் முகமாக இதன் உள்ளடக்கம் அமைந்திருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மஜ்னவீ_சரீப்_(சிற்றிதழ்)&oldid=737822" இலிருந்து மீள்விக்கப்பட்டது