மஞ்சரி மகிஜானி
மஞ்சரி மகிஜானி (Manjari Makijany) என்றபர் ஓர் இந்திய எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் ஆவார். இவர் அமெரிக்க மற்றும் இந்தி படங்களில் பணிபுரிகிறார். இவர் விருது பெற்ற குறும்படங்களான தி லாஸ்ட் மார்பிள் (2012), தி கார்னர் டேபிள் (2014) ஆகியவற்றிற்காக மிகவும் பிரபலமானவர்.[3][4]
மஞ்சரி மகிஜானி | |
---|---|
பிறப்பு | 1986/1987 (அகவை 37–38)[1] |
பணி | இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர், உதவி இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 2008–தற்போது |
பிள்ளைகள் | 1[2] |
உறவினர்கள் | ரவீணா டாண்டன் (உறவினர்) |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுமகிஜானி இந்தி நடிகர் மேக் மோகனின் மகள் மற்றும் நடிகை ரவீனா டாண்டனின் உறவினர் ஆவார்.[5]
தொழில்
தொகு2016 இல் அமெரிக்காவின் ஏ.எப்.ஐ கன்சர்வேட்டரியின் பெண் இயக்குநர்களுக்கான பட்டறையில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு பெண்களில் மகிஜானியும் ஒருவர் ஆவார். 1974 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் தேர்வு பெற்ற இரண்டாவது இந்தியர் இவர் ஆவார்.[6] ஏ.எப்.ஐ டி.டபிள்யூ.டபிள்யூவின் ஒரு பகுதியாக, இவர் இயக்கிய ஐ சீ யூ (2016), நியூயார்க் நகர சுரங்கப்பாதையில் மனம் மாறிய தற்கொலை குண்டுதாரியைப் பற்றிய வியத்தகு பரபரப்பூட்டும் படமாகும். 2017 இல் அறிமுகமான ஃபாக்ஸ் பிலிம்மேக்கர்ஸ் பணியகத்தில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 25 பெண்களில் இவரும் ஒருவராவார்.[7] 2017 ஆம் ஆண்டு முதல் யுனிவர்சல் பிக்சர்ஸ் டைரக்டர்ஸ் இன்டென்சிவ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு திரைப்படப் படைப்பாளிகளில் மஞ்சரியும் ஒருவராவார்.[8]
மகிஜானி கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் (UCLA) தொழில்முறை திரைக்கதை எழுத்தாளர்கள் திட்டத்தை நிறைவு செய்தார். அங்கு இவர் தனது திரைக்கதையான சிட்டி ஆஃப் கோல்டை உருவாக்கினார். எழுத்துப் படைப்பானது 2015 இல் நேட் வில்சனின் ஜோய் டி விவ்ரே விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இவர் வேக் அப் சித் மற்றும் சாத் கூன் மாஃப் ஆகிய இந்தியப் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். டிஸ்னியின் லைவ் ஆக்சன்-அனிமேசன் படமான லில்லி தி விட்ச்: தி ஜர்னி டு மண்டோலன், காந்தி ஆஃப் தி மந்த் ஆகிய படங்களிலும், மிஷன்: இம்பாசிபிள் - கோஸ்ட் புரோட்டோகால் மற்றும் த டார்க் நைட் ரைசஸ் ஆகிய படங்களுக்கு இந்தியாவில் நடந்த பணிகளிலும் இவர் பணியாற்றினார்.
மகிஜானியின் எழுத்து மற்றும் இயக்கம் 7 நிமிட மௌனப் படமான தி லாஸ்ட் மார்பிள் (2012) இர் இருந்து தொடங்கியது, இது சியாட்டில் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது மேலும் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் "சிறந்த திரைப்படத்திற்கான" சர்வதேச விருதுகளைப் பெற்றது.[9] இந்தப் படம் கிளெர்மாண்ட்-ஃபெராண்ட் சர்வதேச குறும்பட விழாவில் 'பெஸ்ட் ஆஃப் ஃபெஸ்ட்' ஆக சேர்க்கப்பட்டது. மேலும் 30 இக்கும் மேற்பட்ட சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டது.
தி கார்னர் டேபிள் (2014) இவரது இரண்டாவது படமாகும். இதில் டாம் ஆல்டர் நடித்தார். இந்த 24 நிமிட குறும்படம் நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் (2014) "சிறந்த படமாக" தேர்ந்தெடுக்க பரிந்துரைக்கப்பட்டது. இந்த திரைப்படம் கேன்ஸ் குறும்படப் பகுதியின் ஒன்றாக இருந்தது.
2019 ஆம் ஆண்டில், வினாதி மகிஜானி மற்றும் மஞ்சரி மகிஜானி ஆகியோரால் எழுதப்பட்ட ஸ்கேட்டர் கேர்ள் (2021) என்ற திரைப்படத்தை இவர் படமாக்கத் தொடங்கினார். இது இந்தியாவின் இராசத்தானில் உள்ள ஒரு வளரிளம் பருவ பழங்குடிப் பெண்ணின் கதையைக் கூறியது. ஸ்கேட்டர் கேர்ள் படமானது மகிஜானி திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமான படம் ஆகும். இப்படம் 2019 இல் இராசத்தானின் கெம்பூர், உதய்பூரில் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது. இப்படத்தில் புதுமுகம் ரேச்சல் சஞ்சிதா குப்தா அறிமுகமானார், மேலும் அம்ரித் மகேரா, ஜொனாதன் ரீட்வின், சுவாதி தாஸ், அங்கித் ராவ், வகீதா ரெகுமான் ஆகியோர் நடித்தனர்.[10]
2021 ஆம் ஆண்டில் இவரது அடுத்த படமானது டிஸ்னி சேனலின் அசல் படமான ஸ்பின் ஆகும். இது டிஜே கலவைகளை உருவாக்குவதில் தனக்கு ஆர்வம் இருப்பதைக் கண்டறிந்த ஓர் இந்திய அமெரிக்க இளைஞனைப் பற்றிய படமாகும்.[11][12]
மேற்கோள்கள்
தொகு- ↑ Lalwani, Vickey (29 October 2012). "Mac Mohan's daughter wishes to fulfill her dad's dream". Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/Mac-Mohans-daughter-wishes-to-fulfill-her-dads-dream/articleshow/17001800.cms.
- ↑ "Manjari Makijany on Instagram: "ZOYA our "life" is here! We welcomed her into this world on Oct 31st, 2021 Truly the Best Diwali of our lives! Wishing you all a very Happy and Prosperous Diwali from us 🪔✨🌟❤️🧿"".
- ↑ "The Last Marble". official website. Archived from the original on 2023-01-28. பார்க்கப்பட்ட நாள் 2024-02-21.
- ↑ "The Corner Table". Official Website.
- ↑ "Raveena and cousin Manjari have their films screened on the same day". http://www.mid-day.com/articles/raveena-and-cousin-manjari-have-their-films-screened-on-the-same-day/180557.
- ↑ "AFI DWW 2016 participants". American Film Institute Directing Workshop for Women. Archived from the original on 2016-04-01. பார்க்கப்பட்ட நாள் 2024-02-21.
- ↑ "American Film Institute Reveals 25 Women Chosen for the Fox Filmmakers Lab". IndieWire. 15 January 2017.
- ↑ "Universal Sets Eight Directors For 'Directors Intensive' Program Promoting Diversity". Deadline. 29 September 2017.
- ↑ D’Mello, Yolande (12 June 2012). "Sambha's daughter picks up booty".
- ↑ Vijayakar, R.M. (16 August 2019). "waheeda-rehman-returns-to-udaipur-years-after-guide-for-desert". IndiaWest. https://www.indiawest.com/entertainment/bollywood/waheeda-rehman-returns-to-udaipur-years-after-guide-for-desert/article_7388a2a0-c042-11e9-adb0-938e6f7a61d3.html.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Disney Channel(August 20, 2020). "Avantika Vandanapu to Star and Manjari Makijany to Direct "Spin," A Newly Greenlit Disney Channel Original Movie". செய்திக் குறிப்பு.
- ↑ Disney Channel(March 12, 2021). "Disney Channel's First Indian American Movie 'Spin' 'Is a Dream Come True': New Photos (Exclusive)". செய்திக் குறிப்பு.