மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோவில் இலங்கையின் வடக்கே புங்குடுதீவு மடத்துவெளி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு முருகன் கோவில் ஆகும். இதன் தொன்மைப் பெயர் ”'இளந்தாரி நாச்சிமார் கோவில் என்பதாகும்.
இவ்வாலயத்தின் வரலாறு பற்றிய தகவல்களை திட்டவட்டமாக பெற்றுக்கொள்ளமுடியாத போதிலும் இவ்வாலயம் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இவ்வாலயம் 1960களில் முற்றாக அழிக்கப்பட்டுப் புனரமைப்புச் செய்யப்பட்டது. கருவறையில் முருகப்பெருமானின் வேலாயுதமும், ஆலயத்தின் வடமேற்கு மூலையில் நாச்சிமாரும் பிரதிட்டை செய்யப்பட்டனர். இத்துடன் இவ்வாலயத்தின் பெயரும் மடத்துவெளி ”ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி கோவில்” எனப்பெயர் மாற்றம் செய்யபட்டது. இவ்வாலயம் சின்ன நல்லூர் என்று அழைக்கப்படும் அளவிற்குப் பிரபலம் அடைந்தது. நான்கு புறமும் சுற்றுமதில்களுடனான அன்னதான மடமும் அமைக்கப்பட்டது.
1991 ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் தீவகத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக புங்குடுதீவிலிருந்து பெருமளவு மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் ஆலயம் நித்திய நைமித்திய பூசைகளின்றி பொலிவிழந்திருந்தது. கோவில் கோபுரம் மீளப் புனரமைக்கப்பட்டு 2013 சூன் 28 இல் குடமுழுக்கு முறைப்படி நடைபெற்றது.
மேற்கோள்கள்
தொகு- புங்குடுதீவு மான்மியம்