மடுவு
மடுவு அல்லது மறு (Maduvu) என்பது மான் கொம்பால் உருவாக்கப்பட்ட ஒரு போர்க் கருவி ஆகும். இது தமிழர் தற்காப்புக் கலையில் பயன்படுத்தப்படும் ஒரு போர்க் கருவி ஆகும்.[1][2][3]
மடுவு | |
---|---|
வகை | Melee |
அமைக்கப்பட்ட நாடு | இந்தியா |
மான் கொம்பு ஆயுதம்
தொகுசிலம்பத்தில் மான் கொம்பை ஆயுதமாக பயன்படுத்தி உள்ளனர். ஏனெனில் இந்த மான் கொம்பினை வாள் வைத்து எளிதில் வெட்ட முடியாது. அதனால் அவற்றை கேடயமாகப் பயன்படுத்தவும், அதன் கூரான பகுதியைக் கொண்டு எதிரியைத் தாக்கவும் முடியும். இந்த மான் கொம்பில் கேடயம் மற்றும் ஈட்டி பொருத்தியும் பயன்படுத்தியுள்ளனர்.
மான்
தொகுஇந்த ஆயுதத்தில் பயன்படுத்தப்படும் கொம்பானது புல்வாய் (Blackbuck) என்னும் வகையைச் சேர்ந்த மானில் இருந்து கிடைப்பது ஆகும். அதில் ஆண் மானின் பெயர் இரலை பெண் மானின் பெயர் கலை. இந்த மான் இனம் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமறைக்காடு பகுதியில் அதிகமாகக் காணப்பட்டது. இந்த மானுக்கு திருகுமான், வெளிமான், முருகுமான் என்ற பல்வேறு தமிழ் பெயர்களும் உண்டு. இவை, உலகில் அழகிய கொம்புகளை உடைய முதல் 10 வகை மான் இனங்களில், 7 ஆவது இடத்தைப் பெற்றுள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ PutraDanayu (2021-03-30). Sword: Tell about sword in human history (in ஆங்கிலம்). Putra Ayu. அமேசான் தர அடையாள எண் B097SC83NR.
- ↑ Guruji Murugan, Chillayah (20 October 2012). "Silambam Weapons Deer Horn Maduvu". Silambam. பார்க்கப்பட்ட நாள் 31 May 2013.
- ↑ Richard F. Burton (1884). The Book Of The Sword. Dover. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-486-25434-8.